EPFO சூப்பர் செய்தி: EDLI விதிகளில் மாற்றம்... மேம்படுத்தப்பட்ட காப்பீட்டு நன்மைகள் பற்றிய முக்கிய அப்டேட்
EDLI Scheme: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது பிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்க புதிய விதிகளை கொண்டு வருகிறது.
EDLI Scheme: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அவ்வப்போது பிஎஃப் உறுப்பினர்களின் வசதிகளை அதிகரிக்க புதிய விதிகளை கொண்டு வருகிறது. சில சமயங்களில் ஏற்கனவே உள்ள விதிகளிலும் மாற்றங்கள் செய்ய்யப்படூகின்றன. அப்படி சமீபத்தில் செய்யபட்டுள்ள ஒரு முக்கிய மாற்றத்தை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் EDLI, அதாவது வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீடு திட்டத்தின் (Employees' Deposit Linked Insurance Scheme) கீழ் நீட்டிக்கப்பட்ட ஆயுள் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துள்ளது. இதனால் ஊழியர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்? நிறுவனங்கள், பணியாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) மாற்றங்களுக்கு ஏற்றவாறு தங்கள் செயல்பாடுகளை எவ்வாறு மாற்றியமைக்க வேண்டும்? இவற்றிவ் விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கான புதிய விதிகள் என்ன?
- EDLI இன் கீழ் மேம்படுத்தப்பட்ட காப்பீட்டுப் பலன்கள் தொடரும் என மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா என கூறியுள்ளார்.
- இதனால் 6 கோடிக்கும் அதிகமான EPFO உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு (Life Insurance) உறுதி செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
- இந்த நீட்டிப்பு ஏப்ரல் 28, 2024 முதல் நடைமுறைக்கு வரும்.
- முன்னர் மூன்று ஆண்டுகளுக்கு செய்யப்பட்ட நீட்டிப்பு ஏப்ரலில் முடிவடைந்தது.
ஏப்ரல் 2021 வரை, EDLI திட்டத்தில் வரையறுக்கப்பட்ட அளவுகோல்களின்படி, இறந்த ஊழியரின் சட்டப்பூர்வ வாரிசுக்கான அதிகபட்ச பலன் ரூ.6 லட்சமாக வரையறுக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர், அரசாங்கம் ஏப்ரல் 28, 2021 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச பலன்களை முறையே ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.7 லட்சமாக உயர்த்தியது. தற்போது இந்த நீட்டிப்பு தொடரப்பட்டுள்ளது.
EPF Members: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
காப்பீட்டுத் தொகை (Insurance cover): ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீட்டுத் தொகையானது, பணியாளர் மரணம் அடைந்தால் குடும்பங்களுக்கு நிதி ரீதியாக நிவாரணம் அளிக்கிறது.
தகுதி (Eligibility): இந்த நீட்டிப்பு அனைத்து EPFO உறுப்பினர்களுக்கும் கிடைக்கும். இதில் அவ்வப்போது வேலையை மாறியவர்களும் அடங்குவர். ஈடிஎல்ஐ திட்டம் (EDLI Scheme) குறிப்பிடத்தக்க நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது.
ESIC இன் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன்ன?
- முதலாளிகள் / நிறுவனங்களுக்கு, பணியாளர் நலனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) வழிகாட்டுதல்களில் முக்கியமான புதுப்பிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
- ESIC, தகுதியுள்ள ஊழியர்களுக்கு மருத்துவப் பலன்கள், நோயின் போது பண வசதி மற்றும் மகப்பேறு விடுப்பு ஆகியவற்றை வழங்குகிறது.
- தங்கள் ஊழியர்கள் காப்பீடு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்வதில் முதலாளிகள் / நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நிறுவனங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்:
- ESIC-ன் கீழ் உள்ள பணியாளர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவப் பராமரிப்புக்காக நிதி உதவியை பெற உரிமையுடையவர்கள்.
- சரியான நேரத்தில் பங்களிப்புகளைச் செலுத்தி ஊழியர்கள் இந்த நன்மைகளைப் பெறுவதை முதலாளிகள் / நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
- இந்த நன்மைகள் பற்றி ஊழியர்களுக்கு தெரிவிக்கப்படுவதை முதலாளிகள் / நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.
- EPFO மற்றும் ESIC தேவைகள் இரண்டிற்கும் சரியான நேரத்தில் தேவையான செயல்பாடுகளை செய்வதை நிறுவனங்கள் உறுதிசெய்து, அதன் மூலம் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்.
மேலும் படிக்க | தீபாவளிக்கு இந்த 6 பங்குகளை வாங்குங்கள்... லாபம் அதிகம் கிடைக்க வாய்ப்பு!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ