EPFO Update: பிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), பிறந்த தேதி (DOB) ஆதாரமாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து ஆதார் அட்டையை அகற்றியதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், பிஎஃப் கணக்கு (PF Account) வைத்திருப்பவர் தனது பிறந்த தேதியை புதுப்பிக்க அல்லது மாற்ற விரும்பினால், அதற்கு ஆதார் அட்டை செல்லுபடியான ஆவணமாக ஏற்கப்படாது. ஓய்வுபெற்றோருக்கான அமைப்பான இபிஎஃப்ஓ (EPFO) இது தொடர்பாக சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இது தொடர்பாக, UIDAI இலிருந்து ஒரு கடிதம் (நகல் இணைக்கப்பட்டுள்ளது) பெறப்பட்டுள்ளது. அதில், பிறந்த தேதி (Date of Birth - DoB) இன் சான்றாக ஆதாரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது" என்று ஜனவரி 16 அன்று வெளிவந்த EPFO சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  


"அதன்படி, ஆதார், குறிப்புகளின் கீழ் JD SOP இன் இணைப்பு -1 இன் அட்டவணை-B இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிறந்த தேதியில் திருத்தம் செய்வதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து அகற்றப்படுகிறது" என்று சுற்றறிக்கை மேலும் கூறுகிறது.


Image here


மேலும் படிக்க | ராமர் படம் போட்ட 500 ரூபாய் நோட்டை வெளியிடுகிறதா ரிசர்வ் வங்கி?


EPF கணக்கில் பிறந்த தேதியை மாற்ற என்ன ஆவணங்கள் தேவை?


EPFO இன் படி, பிறந்த தேதியை புதுப்பிக்க/திருத்துவதற்காக ஆதார் அட்டைக்குப் பதிலாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பயன்படுத்தலாம்:


- பிறப்பு சான்றிதழ்
- ஏதேனும் ஒரு அரசு கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் பட்டியல்
- பள்ளியிலிருந்து வெளியேறியதற்கான சான்றிதழ் (School leaving certificate)
- பள்ளி மாற்று சான்றிதழ் (School transfer certificate)
- சிவில் சர்ஜன் வழங்கிய மருத்துவ சான்றிதழ்
- கடவுச்சீட்டு (Passport)
- பான் எண் (PAN number)
- அரசு ஓய்வூதியம் (Government pension)
- மருத்துவ க்ளெய்ம் சான்றிதழ் (Mediclaim certificate)
- புதுப்பித்தல்/திருத்தம் செய்வதற்கு இருப்பிடச் சான்றிதழும் செல்லுபடியாகும்.


குறிப்பு: இந்த அனைத்து ஆவணங்களிலும் பெயர் மற்றும் பிறந்த தேதி இருக்க வேண்டும்.


ஆதார் என்றால் என்ன, அது எங்கு பயன்படுத்தப்படும்?


ஆதார் (Aadhaar) என்பது இந்திய அரசின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வழங்கப்படும் 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். அடையாளச் சான்றாகவும், முகவரிச் சான்றாகவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த வேண்டும் என்று UIDAI தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், அதை பிறப்புச் சான்றிதழாகப் பயன்படுத்துவது இப்போது செல்லாது என இபிஎஃப்ஓ மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)


அலுவலக பணிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) சார்பில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான பணம், அவர்களது சம்பளத்தில் இருந்து கழிக்கப்படுகிறது. பொதுவாக ஊழியர்களுக்கு இது ஓய்வூதிய நிதிக்கான முதல் படியாக இருக்கும். உங்கள் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அந்த தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் ஊழியரின் கணக்கில் டெபாசிட் செய்யும். அந்த தொகைக்கு அரசாங்கம் பிஎஃப் சந்தாதாரர்களுக்கு வருடாந்திர வட்டியும் வழங்குகிறது.


மேலும் படிக்க | Budget 2024: நடுத்தர வர்க்கத்திற்கு நல்ல செய்தி சொல்வாரா நிதி அமைச்சர்? வரிச் சலுகையில் சர்ப்ரைஸ்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ