EPFO Claim Settlement: பிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO மூலம் நிர்வகிக்கப்படும் இபிஎஃப் நிதியில் மாதா மாதம் பங்களிப்பு அளிக்கும் சுமார் 27 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு EPFO ​​நிவாரணம் வழங்கியுள்ளது. சமீபத்தில் இபிஎஃப்ஓ ஆட்டோ க்ளெய்ம் வசதியின் வரம்பை விரிவுபடுத்தியது. இதன் பிறகு, க்ளைம் செட்டில்மென்ட் தொடர்பான முக்கியமான உத்தரவை EPFO ​​இப்போது வெளியிட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதன் கீழ், இப்போது சில சந்தர்ப்பங்களில், க்ளெய்ம் செட்டில்மெண்ட் செய்ய கேன்சல் செய்யப்பட்ட காசோலை அதாவது கேன்சல் செக் அல்லது வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் புகைப்படத்தை க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்யப் பதிவேற்ற வேண்டிய அவசியமில்லை, இருப்பினும், மற்ற அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பங்களில் மட்டுமே, க்ளெய்ம் செட்டில் செய்யும் செயல்பாட்டின் போது புகைப்படத்தைப் பதிவேற்றுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


புகைப்படத்தைப் பதிவேற்றலாமா வேண்டாமா என்பதை அதில் வரும் வண்ண குறியீடு கொண்டு அறிந்துகொள்ளலாம்


இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், க்ளைம் செட்டில்மென்ட் செயல்பாட்டின் போது, ​​காசோலை புத்தகம் அல்லது வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை பதிவேற்றுவது கட்டாயமா இல்லையா என்பதை EPFO ​​அலுவலக எழுத்தர் இணையதளத்தின் நிறத்தில் இருந்து தெரிந்துகொள்வார். இருப்பினும், முதலில் இது சம்பந்தப்பட்ட அதிகாரி கோப்பு கைமுறையாக சரிபார்க்க வேண்டும். 


ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் க்ளெய்ம்களை விரைவாக தீர்க்க இது உதவும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காசோலை பக்கம் அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் நகல் பதிவேற்றப்படாவிட்டால், கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். இது தொடர்பாக 'ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு' தனது அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளது. EPFO அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் மின்னஞ்சல் மூலம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


வங்கி KYC ஆன்லைனில் நடக்கும்


- க்ளைம் செட்டில்மென்ட் சமயங்களில், வங்கி KYC ஆன்லைனில் நடக்கும். இதில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் கையொப்பம் இருக்கும் என்று EPFO ​​தெரிவித்துள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், பணியாளர் காசோலை புத்தகம் அல்லது வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை பதிவேற்ற தேவையில்லை.


- புதிய மென்பொருளின் கீழ், இப்போது வங்கியால் இதுபோன்ற வழக்குகள் சரிபார்க்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, இந்த குறிப்பிட்ட வழக்கு செயலாக்கக்கூடியதா இல்லையா, வங்கி இதை வெரிஃபை செய்து விட்டதா ஆகிய தகவல்களுடன் ஒரு செய்தி வரும். மேலும் செக்புக் அல்லது வங்கி பாஸ்புக்கின் புகைப்படத்தை பதிவேற்றலாமா வேண்டாமா என்ற செய்தியையும் நீங்கள் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு பணம் வைத்திருக்கலாம்? விதிகளை மீறினால் வருமான வரி நோட்டீஸ் வரும்


- ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்ட க்ளெய்ம்களை விரைவாக தீர்ப்பதற்கும், காசோலை பக்கம்/சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் படங்கள் பதிவேற்றப்படாததால் நிராகரிக்கப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


- கோரிக்கை தொடர்பான PDF இன் கடைசி பகுதியில் ஒரு செய்தி தோன்றும். வங்கி KYCயை ஆன்லைனில் சரிபார்த்ததாகவும், இதன் காரணமாக காசோலை இலை / சான்றளிக்கப்பட்ட வங்கி பாஸ்புக் படத்தை பதிவேற்றம் செய்வது கட்டாயமில்லை என்றும், முதலாளி டிஜிட்டல் கையொப்பமிட்டதாகவும் அதில் எழுதப்பட்டிருக்கும். இதுபோன்ற கோரிக்கைகளை செயல்படுத்தும் அதிகாரிகளின் வசதிக்காக, விரைவான வண்ணக் குறிச்சொல் வசதி வழங்கப்படும்.


ஆன்லைன் க்ளெய்ம் செய்வதற்கான செயல்முறை என்ன?


- UAN சான்றுகளைப் பயன்படுத்தி உறுப்பினர் இடைமுகத்தில் லாக் இன் செய்யவும்.


- உங்கள் UAN க்கு எதிராகக் குறிப்பிடப்பட்டுள்ள KYC மற்றும் சேவைத் தகுதி நிபந்தனைகள் சரியாக, முழுமையாக உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.


- தொடர்புடைய க்ளெய்மை தேர்ந்தெடுக்கவும்.


- ஆன்லைன் க்ளெய்ம் சமர்ப்பிக்கும் செயல்முறையை முடிக்க, UIDAI இல் பதிவு செய்யப்பட்ட மொபைலில் பெறப்பட்ட OTP ஐப் பயன்படுத்தி வெரிஃபை செய்யவும். 


மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் பேங்க் வேலை இருக்கா? வங்கி விடுமுறை நாட்களின் லிஸ்ட் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ