மிகப்பெரிய ஷாக்கை தந்த EPFO, இனி இந்த வேலைக்கு ஆதார் செல்லாது..
EPFO-ல் இருந்து மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இனி, பிறந்த தேதியைப் புதுப்பிக்கவும், திருத்தவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது.
இ.பி.எஃப்.ஓ முக்கிய அப்டேட்: நீங்கள் அரசு ஊழியரா? உங்கள் குடும்பத்தில் யாரேனும் அரசுப் பணிகளில் உள்ளார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். தற்போது EPFO-ல் இருந்து மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி இனி மக்கள், EPFO-ல் (ஊழியர் வருங்கால வைப்பு நிதி) தங்களின் பிறந்த தேதியைப் புதுப்பிக்கவும், திருத்தவும் ஆதார் அட்டையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் ஆதார் அட்டையை ஏற்க EPFO மறுத்துவிட்டது. எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, இது தொடர்பான வழிகாட்டுதலை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு வெளியிட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO - Employees' Provident Fund Organisation) இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒரு பகுதியாகும். எனவே தற்போது பிறந்த தேதி சான்றிதழாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளதாக EPFO தெரிவித்துள்ளது.
UIDAI இலிருந்து ஒரு கடிதம் கிடைத்தது:
இந்நிலையில் தற்போது UIDAI இடம் இருந்து ஒரு கடிதம் பெறப்பட்டுள்ளது, அதில் ஆதாரை DoB (Date Of Birth) ஆதாரமாகப் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது. அப்படி இந்த ஆதார் பயன்படுத்தப்பட்டால், அது ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் பட்டியலிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்று கடித்தத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கடிதத்திற்குப் பிறகு, ஜனவரி 16, 2024 அன்று EPFO ஆல் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது, அதில் இது தொடர்பான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்பட்ட EPFO சுற்றறிக்கையின்படி, பிறந்த தேதியை மாற்ற (Date of Birth) இந்த ஆவணங்களைப் பயன்படுத்தலாம்-
>>பிறப்பு மற்றும் கடன் பதிவாளரால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்
>> அரசு வாரியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் மதிப்பெண்கள்
>> இது தவிர, பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளடக்கிய ஸ்கூல் லீவிங் சர்டிபிகேட் (எஸ்எல்சி), டிரான்ஸ்பர் சர்டிபிகேட் (டிசி) மற்றும் எஸ்எஸ்சி சான்றிதழ் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
>> பாஸ்போர்ட்
>> பான் கார்டு
>> மத்திய/மாநில அரசு நிறுவனங்களின் சேவைப் பதிவின் அடிப்படையிலான சான்றிதழ்
>> அரசாங்கத்தால் வழங்கப்பட்ட குடியிருப்பு சான்றிதழ்.
ஆதாரை ஏன் பயன்படுத்த முடியாது?
ஆதார் அடையாளச் (Aadhaar Card) சான்று மற்றும் முகவரிச் சான்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நீங்கள் அதை பிறந்த தேதி (DoB - Date Of Birth) சான்றிதழாகப் பயன்படுத்த முடியாது. ஆதார் என்பது இந்திய அரசின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட அடையாள எண் ஆகும். இந்த எண் இந்த எண் இந்தியா முழுவதும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படுகிறது.
ஒரு பெரு நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களுக்கும் வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) நிச்சயம் இருக்கும். ஊழியர்களின் சம்பளத்திலிருந்து ஒரு சிறிய தொகை பி.எஃப் கணக்கில் சேர்க்கப்படும். நம்மை வேலைக்கு சேர்த்துள்ள நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை பி.எஃப் கணக்கில் மாதந்தோறும் சேர்த்து வரும். இது எதிர்காலத்தில் அந்த ஊழியருக்கு மிகப் பெரிய சேமிப்பாக இருந்து துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ