ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அமைப்புசாரா துறையினருக்கு, அதாவது தினசரி ஊதியம் பெறும் தினக்கூலி பணியாளர்கள் மற்றும் சிறிய வரம்பிலான தொழிலாளர்களுக்கு பெரிய பரிசுகளை வழங்க தயாராகி வருகிறது. இபிஎஃப்ஓ-வின் முன்மொழியப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில் இந்தத் தொழிலாளர்கள் சேர்க்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பை (கவரேஜ்) அதிகரிக்கக்கூடும். இந்த புதிய திட்டம் தனிப்பட்ட பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டது. இது ஒவ்வொரு பணியாளருக்கும் 60 வயதுக்குப் பிறகு குறைந்தபட்சம் மாதம் ரூ 3,000 ஓய்வூதியம் பெறுவதை உறுதி செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முன்மொழியப்பட்ட திட்டம் யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டம் (Universal Pension Scheme) என்று பெயரிடப்படலாம். தற்போதுள்ள ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (இபிஎஸ்), 1995 இன் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதை இந்த புதிய திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாதம் ரூ. 15,000க்கு மேல் சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு கவரேஜ் இல்லை. ஒரு எளிய ஓய்வூதியத் தொகை மட்டுமே உள்ளது .


மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ 


புதிய திட்டத்தில் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், குழந்தைகள் ஓய்வூதியம் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும். இருப்பினும், இந்த ஓய்வூதியப் பலன்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சேவை காலம் 10-லிருந்து 15 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். உறுப்பினர் ஒருவர் 60 வயதிற்குள் இறந்தால், அந்த குடும்பத்திற்கு யூனிவர்சல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும்.


ஒவ்வொரு மாதமும் 3 ஆயிரம் ஓய்வூதியம் பெற, இந்தத் தொகையை ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 3,000 ஆக டெபாசிட் செய்ய வேண்டும். மொத்தம் ரூ 5.4 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். இபிஎஃப்ஓ- இன் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) அமைத்த குழு, இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் தானாக முன்வந்து அதிக பங்களிப்பைத் தேர்வுசெய்து அதிக ஓய்வூதியத்திற்காக அதிக தொகையை டெபாசிட் செய்யலாம் என்று கூறியது. தற்போது, ​​20 தொழிலாளர்களுக்கு மேல் உள்ள நிறுவனங்களில் மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கு இபிஎஃப் பங்களிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பணியாளரும் தனது அடிப்படை சம்பளத்தில் 12% இபிஎஃப் திட்டத்தில் கொடுக்கிறார்கள்.


இபிஎஃப்-க்கு பங்களிக்கும் அனைவருக்கும் இபிஎஸ் கட்டாயமாகும். முதலாளி / நிறுவனத்தின் பங்களிப்பில் 8.33% ஓய்வூதியத் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. இது, மாதத்திற்கு ரூ.15,000 சம்பள உச்சவரம்பின் அடிப்படையில் மாதத்திற்கு ரூ.1,250 உச்சவரம்புக்கு உட்பட்டது.


மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் வட்டி வரவு வைக்கப்பட்டதா? சரிபார்க்க வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ