EPFO Higher Pension: வேலையில் இருப்பவர்கள் இப்போது தங்கள் இபிஎஃப் கணக்கிலிருந்து அதிக ஓய்வூதியத்தைப் பெறலாம். இபிஎஃப்ஓ -இன் புதிய விதியின்படி, நீங்கள் இப்போது உங்கள் உண்மையான அடிப்படை சம்பளத்தில் (ஏக்சுவல் பேசின் சேலரி) ஓய்வூதியம் பெறலாம். இது முன்பு 15000 வரையிலான அடிப்படை வருமானத்திலேயே கணக்கிடப்பட்டது. ஆனால், உயர் ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படும் என்பதில் இன்னும் பல குழப்பங்கள் உள்ளன. 2014க்குப் பிந்தைய பங்களிப்புகள் இதில் எப்படிக் கணக்கிடப்படும்? அதிக ஓய்வூதியத்தால் உண்மையில் பயனடைபவர்கள் யார்? இபிஎஃப்ஓ உயர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளதா? உயர் ஓய்வூதியம் தொடர்பான குழப்பங்களைத் தீர்க்க, இந்த பதிவு உதவியாக இருக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இபிஎஸ்-ஊழியர் ஓய்வூதியத் திட்டம்


- ஓய்வூதிய கணக்கீடு உண்மையான அடிப்படை வருமானத்தில் 8.33%
- ஓய்வூதியத்திற்கு ரூ. 15,000 வரம்பு என்ற விதி முடிவுக்கு வந்தது
- தற்போதைய வருமானம்+டிஏ அடிப்படையில் இபிஎஸ் கணக்கிற்கான பங்களிப்பு
- உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பில் விதிகள் மாற்றப்பட்டுள்ளன
- கூடுதல் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26 ஜூன் 2023


EPS என்றால் என்ன?


- இது வேலை செய்பவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்
- ஒவ்வொரு மாதமும் வருமானத்தின் ஒரு பகுதி இபிஎஃப்ஓ -​​இல் டெபாசிட் செய்யப்படுகிறது
- தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள்
- EPS-95 திட்டம் 1995 இல் செயல்படுத்தப்பட்டது


EPS: எப்படி பலன் பெறுவது?


- ஓய்வூதியம் பெறுபவரின் அகால மரணம் ஏற்பட்டால் குடும்பத்திற்கு ஓய்வூதியம்
- மனைவி / கணவன் இறந்தால் வாழ்க்கைத் துணை 50% ஓய்வூதியப் பலனைப் பெறுகிறார்
-  வாழ்க்கைத் துணைக்குப் பிறகு 25 வயது வரையிலான குழந்தைகளுக்கு 25% ஓய்வூதியம்
- குடும்பம் இல்லாவிட்டால் நாமினி ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார்
- 10 வருட சேவையை முடித்தால் பலன்கள் கிடைக்கும்


மேலும் படிக்க | EPFO மிகப்பெரிய அப்டேட்: அதிகரிக்கிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம்!!


EPS பங்களிப்பு: தற்போதுள்ள விதிகள்


- ரூ. 15000 அடிப்படை வருமானத்தில் ஓய்வூதிய கணக்கீடு
- ஓய்வூதிய வருமான வரம்பு ரூ. 15,000 / மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ரூ. 15,000 வருமானத்துடன் EPS கணக்கில் மாதம் ரூ. 1250
- பணியாளரின் ஓய்வூதிய நிதிக்கு முதலாளியின் பங்களிப்பில் 8.33%


ஓய்வூதிய சம்பளம் என்றால் என்ன?


- கடந்த 5 ஆண்டுகளில் கடைசியாக எடுக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தின் சராசரி
- பணிக்காலம் அதிகபட்சம் 35 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஓய்வு பெறும் வயது 58 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது
- ஓய்வூதியம்=ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம்*சேவை ஆண்டுகள்/70


அதிக ஓய்வூதியம்: 1.16% பங்களிப்பு கணிதம்
- நிர்வாகம் / முதலாளி தரப்பிலிருந்து 1.16% கூடுதல் பங்களிப்பு
- தற்போதுள்ள விதிகளின்படி, அரசு 1.16% பங்களிக்கிறது.
- 15,000 ரூபாய் வரையிலான வருமானத்தில் இருந்து ஓய்வூதியத்தில் அரசு மானியம்
- நீங்கள் அதிக ஓய்வூதிய விருப்பத்தைத் தேர்வு செய்தால், முதலாளி 1.16% பங்களிப்பார்.


அதிக ஓய்வூதியம் பற்றிய குழப்பம்


- ஓய்வூதிய நிதிக்கு முந்தைய ஆண்டுகளின் பங்களிப்பு எவ்வாறு வேலை செய்யும்?
- பிஎஃப் கணக்கிலிருந்து கழித்தால், பின் ஓய்வூதிய கார்பஸ் குறைவாக இருக்குமா?
- ஓய்வூதிய நிதியில் பிஎஃப் தொகை எத்தனை சதவீதத்தில் நிரப்பப்படும்?


EPS மூலம் அதிக பென்ஷன்: இதற்கு யார் தகுதியானவர்?


- 1 செப்டம்பர் 2014க்கு முன் EPS உறுப்பினர்களானவர்கள்  பயன்பெறலாம்
- 2014 முதல் EPFக்கு தொடர்ந்து பங்களித்து வந்திருந்தால் பலன் கிடைக்கும்.
- 2014ல் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பித்தவர்களும் தகுதியானவர்கள்


EPS: அதிக ஓய்வூதியத்தின் நன்மைகள்


- ஓய்வு பெறும்போது அதிக ஓய்வூதியத்தின் பலன்
- அதிக அடிப்படை வருமானம் இருந்தால் அதிக நன்மைகள்
- ஓய்வுக்குப் பிறகு சமூகப் பாதுகாப்பு வலுவாக இருக்கும்


அதிக ஓய்வூதியம்: தேர்வு செய்யவா அல்லது வேண்டாமா?


- ஓய்வூதியத் தொகைக்கு வரி பிடித்த பிறகு தொகை கிடைக்கும்
- முதிர்வு காலத்தில் பிஎஃப் தொகைக்கு வரி விலக்கு உண்டு
- நீங்கள் புதிய அமைப்பைத் தேர்வுசெய்தவுடன் திரும்பிச் செல்ல வழி இல்லை
- ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால் மனைவிக்கு 50% மட்டுமே ஓய்வூதியம்


பிற ஓய்வூதிய விருப்பங்கள்


- என்.பி.எஸ்
- சிஸ்டமடிக் வித்டிராயல் பிளான் 
- ஆன்யுட்டீ பிளான்


மேலும் படிக்க | EPFO:58 வயதுக்கு முன்னரே பென்ஷன் வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ