இபிஎஃப்ஓ யுஏஎன் எண்: சேலரி கிளாஸ் அதாவது ஊதிய வர்க ஊழியர்களின் ஊதியத்தின் ஒரு பகுதி, பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் ஆதாரைப் போலவே தனித்துவமான 12 இலக்க UAN எண்ணைப் பெறுகிறார்கள். இது யுனிவர்சல் கணக்கு எண் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் அகவுண்ட் நம்பர் மூலம், உங்கள் PF கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். மேலும் இதன் மூலம் வட்டியின் தகவலையும் பெறலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் கணக்குத் தகவலைப் பெற, இபிஎஃப்ஓ ​​கணக்கு வைத்திருப்பவர்கள் UAN எண்ணைச் செயல்படுத்த வேண்டும். இதற்குப் பிறகுதான் ஆன்லைனில் பிஎஃப் கணக்கின் பல சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். எனினும், சில சமயம் யுஏஎன் எண்ணை ஒருமுறை ஆக்டிவேட் செய்த பிறகும், அவ்வப்போது மக்கள் யுஏஎன்-ஐ மறந்து விடுகிறார்கள். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.


இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியர் பல்வேறு நிறுவனங்களில் வேலைகளை மாற்றினாலும், அவருடைய UAN எண் எப்போதும் அப்படியேதான் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த எண் ஒவ்வொரு பணியாளரிடமும் இருக்க வேண்டும். எனினும், உங்கள் UAN-ஐ நீங்கள் மறந்து விட்டால்,  கவலைப்படத் தேவையில்லை. 


வீட்டில் இருந்தபடியே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் UAN எண்ணை எளிதாகக் கண்டறியலாம். UAN எண்ணைக் கண்டுபிடிப்பதற்கான செயல்முறையை இங்கே தெரிந்துகொள்ளாலாம். 


மேலும் படிக்க | EPFO Update: உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி வரவில்லையா? இதுதான் காரணம் 


இந்த வழியில்,  வீட்டில் இருந்தபடியே UAN எண்ணைக் கண்டுபிடிக்கவும்


1. UAN எண்ணைக் கண்டறிய, முதலில் நீங்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in ஐ கிளிக் செய்ய வேண்டும்.
2. அடுத்து முகப்புப் பக்கத்தில் For Employees என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து சேவைகள் பகுதிக்குச் சென்று உறுப்பினர் UAN/Online Service விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. இதற்குப் பிறகு உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும். அதில் Know your UAN விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இதற்குப் பிறகு உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும், அதில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை உள்ளிடவும்.
5. பின்னர் மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்.
6. இதற்குப் பிறகு உங்கள் முன் ஒரு பக்கம் திறக்கும். அதில் உங்கள் பெயர், பிறந்த தேதி, PF உறுப்பினர் ஐடி, ஆதார் எண் மற்றும் PAN எண்ணை உள்ளிட வேண்டும். அதன் பிறகு கேப்ட்சாவை நிரப்பவும்.
7. பிறகு Show My UAN என்பதை கிளிக் செய்யவும்.
8. இதன் பிறகு UAN எண் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும்.


இந்த வகையில், UAN எண்ணை ஆக்டிவேட் செய்யவும்


- UAN எண்ணைச் செயல்படுத்த, முதலில் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in க்குச் செல்லவும்.
- அங்கு For Employee விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உறுப்பினர் UAN/Online Service விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு, லாக் இன் பக்கம் உங்கள் முன் திறக்கும். அதில் உலகளாவிய கணக்கு எண் (UAN) என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் UAN எண், பிறந்த தேதி, மொபைல் எண் மற்றும் கேப்ட்சாவை இங்கே உள்ளிடவும்.
- இதற்குப் பிறகு Get Authorization Pin என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP வரும். அதில் விவரங்களைச் சரிபார்த்து, Agree என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் UAN எண் 6 மணிநேரத்தில் செயல்படுத்தப்படும்.


மேலும் படிக்க | EPFO சூப்பர் செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கப்படலாம், விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ