முக்கிய செய்தி!! இந்த நாளில் EPFO 3.0 அறிமுகம்... PF ஏடிஎம் கார்டு, பணம் எடுக்கும் முறைகளில் மாற்றம்
EPFO Update: இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்திறன், அணுகல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
EPFO Latest News: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு 2025ஆம் ஆண்டு பல நல்ல செய்திகளுடன் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்களுக்கு குறிப்பிடத்தக்க நன்மைகளை அளிக்கும் வகையில், அரசாங்கம் EPFO 3.0 ஐ ஜூன் 2025 க்குள் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதற்கான அறிவிப்பு வந்தது முதல் இபிஎஃப் சந்தாதாரர்கள் இதற்காக மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
EPF Subscribers: இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு அதிகரிக்கும் வசதிகள்
இபிஎஃப் சந்தாதாரர்களின் செயல்திறன், அணுகல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த புதிய மென்பொருள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய சேமிப்பை நிர்வகிக்கும் விதம் இதனால் மேன்மையடையும் என நம்பப்படுகின்றது.
மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் அணுகல்
EPF செயல்முறைகளை நெறிப்படுத்தும் நோக்கில் EPFO 3.0 பல அம்சங்களைக் கொண்டு வரும் என்று மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். புதிய அமைப்பின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பயனர் நட்பு இணையதள இடைமுகமாக இருக்கும். இது உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை பார்வையிடும் செயல்முறையையும், நிர்வகிப்பதையும் எளிதாக்குகிறது. இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள வங்கி அமைப்புகளைப் போன்ற செயல்திறனை வழங்கும் என நம்பப்படுகின்றது. இதனால் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதிய நிதியை தடையின்றி அணுக முடியும்.
மேலும் படிக்க | Budget 2025: FD வட்டிக்கு புதிய விதிகள், நடுத்தர வர்க்க மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
PF ATM Card: இபிஎஃப் உறுப்பினர்களுக்கான ATM அட்டை
- இந்த புதிய அமைப்பு தொடங்கப்பட்டவுடன், ஊழியர்கள் தங்கள் இபிஎஃப் தொகையை (EPF Amount) ஏடிஎம்களில் இருந்து நேரடியாக எடுக்க முடியும்.
- இதன் மூலம் இபிஎஃப் தொகைக்கான அணுகல் மேம்படுத்துகிறது.
- மேலும் இபிஎஃப் உறுப்பினர்கள் நிதி ரீதியான அவசரநிலைகளை மிகவும் வசதியாக எதிர்கொள்ள இது உதவும்.
- முதல் கட்ட இணையதளம் மற்றும் சிஸ்டம் மேம்படுத்தல்கள் ஜனவரி 2025 இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
EPF Pension Withdrawal
ஏடிஎம் -இல் பணத்தை எடுப்பதோடு, ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் (இபிஎஸ்) மாற்றங்களை செய்யவும் EPFO ஆராய்ந்து வருகிறது. இது ஊழியர்களுக்கு அவர்களின் பங்களிப்பு அளவை மாற்றிக்கொள்ளும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும். தற்போதைய அமைப்பில் ஊழியர்கள் மற்றும் முதலாளி / நிறுவனம் என இரு தரப்பினரும் 12% பங்களிப்பை அளிப்பது கட்டாயமாகும். ஆனால் தற்போது முன்மொழியப்பட்ட மாற்றங்களில், பணியாளர்கள் தங்கள் விருப்பங்களின் அடிப்படையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களிக்க வாய்ப்பு கிடைக்கலாம்.
EPFO 2.0: ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடையும்
முழு தகவல் தொழில்நுட்ப அமைப்பையும் மேம்படுத்தும் EPFO 2.0 இன் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், ஜனவரி இறுதிக்குள் இது முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் கூறினார்.
EPFO 3.0: EPF உறுப்பினர்களுக்கான புதிய சகாப்தம்
- இபிஎஃப்ஓ செயல்முறையில் வரும் நாட்களில் பல ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
- இந்த மாற்றங்களின் மூலம், EPFO 3.0, உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கையும் (EPF Account) ஓய்வூதிய சேமிப்புகளையும் முன்பை விட மிகவும் வசதியாகவும் திறமையாகவும் நிர்வகிக்க உதவும்.
இந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் மேம்பாடுகள் ஊழியர்களுக்குப் பயனளிப்பது மட்டுமல்லாமல், எதிர்பாராத நிதித் தேவைகளையும் நிவர்த்தி செய்ய உதவும். இது இந்தியாவின் ஓய்வூதிய சேமிப்பு தளத்தில் ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும் வகையில் அமையும்.
மேலும் படிக்க | EPFO Withdrawal Rules: PF க்ளெய்ம் நிலையை அறிந்து கொள்ளும் எளிய முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ