EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இனி அதிக வட்டி கிடைக்கும்: பெரிய அறிவிப்பு விரைவில்
EPFO New Update: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இபிஎஃப் இப்போது அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.
இபிஎஃப்ஓ ஈக்விட்டியில் முதலீட்டை அதிகரிக்கவுள்ளது: பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி. இபிஎஃப் வாரியம் சமீபத்தில் 2021-22 நிதியாண்டிற்கான இபிஎஃப் விகிதத்தை 8.5 சதவீதத்திலிருந்து 8.1 சதவீதமாகக் குறைத்தது. இது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இபிஎஃப் இப்போது அதன் முதலீட்டாளர்களுக்கு அதிக வருமானத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. பங்குச் சந்தையில் முதலீட்டு வரம்பை அதிகரிப்பது குறித்து இபிஎஃப்ஓ வாரியம் விரைவில் முடிவெடுக்கக்கூடும். அப்படி நடந்தால், அது இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகப்பெரிய செய்தியாக இருக்கும். இதனால் அவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
வாரியம் இது குறித்து முடிவு செய்யக்கூடும்
ஜூலை 29 மற்றும் 30, 2022 இல், இபிஎஃப்ஓ வாரியம் கூடுகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதில் பங்குச் சந்தை மற்றும் தொடர்புடைய தயாரிப்புகளில் தற்போதுள்ள முதலீட்டு வரம்பை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம். இபிஎஃப் வாரியம் இந்த முடிவை எடுத்தால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தைப் பெறுவார்கள்.
மேலும் படிக்க | EPFO for NRI: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி, எக்கச்சக்க பயன்கள்
அரசு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும்
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, "சிபிடியின் துணைக் குழுவான எஃப்ஐஏசி, பங்குகள் மற்றும் பங்குகள் தொடர்பான முதலீட்டு வரம்பை 5-15 சதவிகிதத்திலிருந்து 5-20 சதவீதமாக உயர்த்த பரிந்துரைத்துள்ளது." என்று கூறினார். எனினும், பங்குச் சந்தையில் இபிஎஃப்ஓ- இன் முதலீட்டு வரம்புகளை அதிகரிப்பதற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முதலீட்டிற்கு அரசு உத்தரவாதம் இருக்காது என்பதால், இதன் காரணமாக முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்திக்க நேரிடலாம் என்று அரசாங்கம் நம்புகிறது.
ஈக்விட்டியில் 20 சதவீதம் வரை முதலீடு செய்யலாம்
பங்குச் சந்தையில் முதலீட்டின் வரம்பை 20 சதவீதமாக உயர்த்தும் திட்டத்திற்கு இபிஎஃப்ஓ -இன் நிதி முதலீடு மற்றும் தணிக்கைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, இபிஎஃப்ஓ அதன் நிதியில் 5 முதல் 15 சதவிகிதம் மட்டுமே பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் (ETFs) மூலம் முதலீடு செய்கிறது. இந்த முறை இபிஎஃப்ஓ -க்கு ஈக்விட்டி முதலீட்டின் மூலம் 2020-21 இல் 16.27 சதவிகிதம் லாபம் கிடைத்துள்ளது. இது 2020-21-ல் 14.67 சதவீதமாக இருந்தது.
இபிஎஃப்ஓ 15 ஆண்டுகளுக்கு அணுசக்தி பத்திரங்களில் முதலீடு செய்துள்ளது. அதற்கு ஆண்டுக்கு 6.89 சதவீதம் வட்டி செலுத்தப்படும். தற்போது மத்திய அரசு மற்றும் மாநில அரசு பத்திரங்களுக்கு 7.27 சதவீதம் முதல் 7.57 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது. இபிஎஃப்ஓ அரசுப் பத்திரங்கள் மற்றும் கார்ப்பரேட் பத்திரங்களில் முதலீடு செய்வதில் குறைந்த வருமானத்தைப் பெறுகிறது.
மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ