EPFO Update: ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரிபவர்கள், ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை இபிஎஃப் -இல் டெபாசிட் செய்கிறார்கள். இபிஎஃப் கணக்கில் ஊழியர் மற்றும் நிறுவனம் என இரு தரப்பிலிருந்தும் பங்களிப்பு செய்யப்படுகிறது. இந்த பங்களிப்பு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியில் 12 சதவீதம் ஆகும். ஊழியர்கள் 12 சதவிகித பங்களிப்பை அளிப்பது போல நிறுவனமும் 12 சதவிகித பங்களிப்பை அளிக்கின்றன. நிறுவனத்தின் பங்களிப்பில், 3.67 சதவிகிதம் இபிஎஃப் -இலும், 8.33 சதவிகிதம் ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்திலும் (Employees' Pension Scheme) டெபாசிட் செய்யப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் (Employees' Pension Scheme) 


ஊழியர் 10 வருட சேவையை முடித்திருந்தால், அவர் EPS95 திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியுடையவராவார். ஆனால் பணியில் இருக்கும் போது ஊழியர் இறந்துவிட்டால், ஓய்வூதிய பலன் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். இந்நிலையில் விதவை ஓய்வூதியம், குழந்தை ஓய்வூதியம், ஆதரவற்றோர் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இது குறித்து இபிஎஸ் 95 திட்டத்தின் (EPS 95 Scheme) விதியில் கூறப்பட்டுள்ள விவரங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம். 


யாருக்கு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?


EPS-95 திட்டத்தின் கீழ், இந்த ஓய்வூதியத்தில் விதவை ஓய்வூதியம், குழந்தை ஓய்வூதியம் மற்றும் அனாதை ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும். விதவை ஓய்வூதியத்தின் கீழ், பணியாளரின் விதவை மனைவி / விதவை கணவருக்கு குறைந்தபட்சம் ரூ 1000 வரை கிடைக்கும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், விதவைகளுக்கு ஓய்வூதியத்தில் 50 சதவீதம் வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | EPF Withdrawal Rules: பணி ஓய்வுக்கு முன்னரே 100% இபிஎஃப் பணத்தை எடுக்க முடியுமா?


குழந்தைகளின் வயது 25 வயதிற்கு கீழ் இருந்தால் குழந்தை ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் விதவை ஓய்வூதியத்தில் 25 சதவீதம் வழங்கப்படுகிறது. இந்த வசதி ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படலாம். குழந்தைகள் அனாதைகளாக இருந்தால், அந்த குழந்தைகளுக்கு 25 வயது வரை ஓய்வூதியத்தில் 75 சதவீதம் கிடைக்கும். குழந்தை உடல் ஊனமுற்றிருந்தால், அவரது வாழ்நாள் முழுவதும் 75 சதவீதம் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.


இந்த ஆவணங்கள் தேவை


இபிஎஸ் (EPS) ஓய்வூதியம் பெற, இறந்தவரின் இறப்புச் சான்றிதழ், ஓய்வூதியத் தொகை பெற உள்ளவர்களின் ஆதார் அட்டை நகல், கணக்கு விவரங்கள், கேன்சல்ட் செக் அல்லது பயனாளியின் வங்கி பாஸ்புக்கின் சான்றளிக்கப்பட்ட நகல் ஆகிய ஆவணங்கள் தேவைப்படும். பயனாளி மைனராக இருந்தால், அவரது வயதுச் சான்றிதழும் வழங்கப்பட வேண்டும். பயனாளிகள் இந்த ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் முன்னர் இந்த ஆவணங்களை தயாராக வைத்திருப்பது அவசியமாகும். 


இந்தத் தொகையையும் நீங்கள் கோரலாம்


பணியில் இருக்கும் போது பணியாளர் இறந்தால், நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசு அல்லது பணியாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினரின் குடும்ப உறுப்பினர் ஆகியோரும் காப்பீட்டுத் தொகையைப் பெறலாம். இந்நிலையில், ஊழியர்களின் டெபாசிட் இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பணியாளரின் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7 லட்சம் வரை காப்பீடு சலுகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் இபிஎஃப்ஓ (EPFO) ​​ஆல் நடத்தப்படும் காப்பீட்டுத் திட்டமாகும். இது இபிஎஃப்ஓ -இல் பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு பணியாளருக்காகவும் இயக்கப்படுகிறது. இபிஎஃப்ஓ உறுப்பினர் 12 மாதங்கள் தொடர்ந்து பணியாற்றியிருந்தால், அந்த ஊழியர் இறந்த பிறகு, நாமினிக்கு குறைந்தபட்சம் ரூ.2.5 லட்சம் பலன் கிடைக்கும்.


மேலும் படிக்க | அகவிலைப்படி 50% அல்ல, 51% ஆக உயரும்: ஜனவரியில் அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பரிசு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ