ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் (EPFO உயர் ஓய்வூதியம்) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து ஜூன் 26, 2023 வரை தங்கள் முதலாளிகளுடன் இணைந்து விண்ணப்பிக்கலாம். ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO -ன் ஒருங்கிணைந்த உறுப்பினர்களின் போர்ட்டலில் அவர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக, அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கான கடைசி தேதி மே 3, 2023 ஆகும். ஆனால் EPFO ​​இந்த கடைசி தேதியை ஜூன் 26, 2023 வரை நீட்டித்துள்ளது. இதுவரை, EPFO-​​க்கு 12 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 7th Pay Commission:மாநில அரசு ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட், டிஏ ஹைக்குடன் மற்றொரு குட் நியூஸ்


உச்சநீதிமன்றம் உத்தரவு 


முன்னதாக, உச்ச நீதிமன்றம் நவம்பர் 4, 2022 அன்று தனது உத்தரவில், தகுதியான அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிக ஓய்வூதியத்தைத் தேர்வு செய்ய EPFO ​​நான்கு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த நான்கு மாத காலம் மார்ச் 3, 2023 அன்று முடிவடைகிறது.


ஓய்வூதியத்தில் என்ன விளைவு இருக்கும்?


இந்த செயல்முறையின் முழு விவரங்களை EPFO ​​முன்பு வெளியிட்டது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக ஓய்வூதியம் பெற பங்குதாரர்களும் அவர்களது முதலாளிகளும் கூட்டாக விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டது. நவம்பர் 2022-ல், உச்ச நீதிமன்றம் ஊழியர்களின் ஓய்வூதிய (திருத்தம்) திட்டம், 2014-ஐ உறுதி செய்தது. முன்னதாக, ஆகஸ்ட் 22, 2014-ன் இபிஎஸ் திருத்தம், ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பள வரம்பை மாதம் ரூ.6,500-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தியது. மேலும், உறுப்பினர்கள் மற்றும் அவர்களது முதலாளிகள் தங்கள் உண்மையான சம்பளத்தில் 8.33 சதவீதத்தை EPS-க்கு பங்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


மேலும் படிக்க | 7th Pay Commission: ஜாக்பார்ட் செய்தி! அரசு ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வாய்ப்பு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ