EPFO RULE: ஓய்வூதிய பலன் பாதிக்காமல்... PF கணக்கில் இருந்து பணம் எடுப்பது எப்படி
EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே. ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன.
PF என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அரசின் சேமிப்புத் திட்டம். இந்தியாவில் பணியில் உள்ள அனைவர்களுக்கும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) இயக்கப்படும் PF கணக்குகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் ஊழியரின் சம்பளத்தில் 12% இந்தக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. மேலும், அதற்கு இணையாண தொகையை முதலாளி அல்லது நிறுவனம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் முதலீடு செய்கிறது.
PF கணக்கில், நிறுவனத்தின் மூலம் போடப்படும் 12 சதவிகிதம் முதலீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, அதில் 8.33 சதவீதம் ஓய்வூதிய திட்டத்தில் (EPS) முதலீடு செய்யப்படும். மீதமுள்ள 3.67 சதவீதம் ஊழியர்களின் EPF கணக்கில் முதலீடு செய்யப்படும். ஊழியரின் பிஎஃப் கணக்கில் முதலீடு செய்யப்படும் EPF தொகை ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
ஊழியர் ஒருவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக PF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வந்தால், அவர் ஓய்வூதியம் பெறும் உரிமையைப் பெறுகிறார் என EPFO விதிகள் கூறுகின்றன. EPF திட்டத்தின் முக்கிய நோக்கம், ஊழியர்கள் ஓய்வு பெறும் போது, அவர்களுக்கு தேவையான வருமானத்தை வழங்குவதே.
ஊழியர்கள் தங்களது அவசர தேவை மற்றும் பிற தேவைகளுக்காக பிஎஃப் கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகையையும் திரும்பப் பெறலாம். ஆனால், பிஎஃப் கணக்கிலிருந்து முழுப் பணத்தையும் எடுத்தால், ஓய்வூதியம் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஓய்வூதியம் தொடர்பான EPFO விதிகளை விரிவாகப் புரிந்துகொள்வோம்.
ஓய்வூதியம் பெற தேவையான நிபந்தனைகள்
PF கணக்கு வைத்திருப்பவர் 10 வருடங்கள் PF கணக்கில் பங்களித்தால், அவர் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவராவார். அதாவது, ஊழியர் தனது PF கணக்கில் தொடர்ந்து 10 வருடங்கள் முதலீடு செய்திருந்தால், அவர் ஓய்வூதியத்தைப் பெற தகுதியுடையவர். அதன் பிறகு அவர் வேலையை விட்டுவிட்டாலும் அல்லது வேலையை மாற்றியிருந்தாலும் கூட, ஓய்வூதியம் கிடைக்கும்.
EPS கணக்கு ஆக்டிவாக இருப்பது முக்கியம்
ஒரு ஊழியர் PF கணக்கில் 10 ஆண்டுகள் பங்களித்து, பின்னர் வேலையை விட்டு விலகினால் கூட, ஓய்வூதியம் கிடைக்கும். ஓய்வூதிய பலனைப் பெற, ஊழியர் தனது EPS நிதியை செயலில் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் போது ஊழியர் தனது PF கணக்கில் உள்ள பணத்தை திரும்பப் பெற்றாலும், அவரது EPS கணக்கு மூடப்படாமல் ஆக்டிவாக இருந்தால், அவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
எந்த வயதிலிருந்து ஓய்வூதியம் பெறலாம்?
PF கணக்கில் தொடர்ந்து 10 ஆண்டுகள் தொடர்ந்து பங்களிக்கும் ஊழியர் 50 வயதுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெறலாம். மேலும், அவர் தனது இபிஎஸ் நிதியை திரும்பப் பெறாமல் இருக்க வேண்டும்.
ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர, பிஃப் கணக்கில் மூலம் ஊழியர்களுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அதில் ஒன்று, குறிப்பிட்ட ஒரு சில காரணங்களுக்காக குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க ஊழியர்களை அனுமதிப்பது.
கீழ்கண்ட காரணங்களுக்காக PF தொகையை திரும்ப பெறலாம்
அவசர சிகிச்சை தேவைப்பட்டால்
குழந்தைகளின் கல்விக்காக
இபிஎஃப் உறுப்பினரின் சகோதரர் அல்லது சகோதரி, மகன் அல்லது மகள் திருமண செலவுக்காக
வீட்டை வாங்க அல்லது பழுதுபார்க்கும் பணிகளுக்காக
வேலை இழந்த நிலையில், வேலையில்லாத போது வாழ்வதார செலவுகளுக்காக
PF கணக்கில் இருந்து பணத்தை எடுக்க விண்ணப்பிக்கும் முறை
PF கணக்கில் இருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை எடுக்க, EPF உறுப்பினர்கள் EPF போர்டல் மற்றும் Umang செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்/ முதலாளியிடம் ஒப்புதல் பெற்ற பிறகு, பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். பணத்தை எடுக்க விண்ணப்பித்த பிறகு, இபிஎஃப் சந்தாதாரர்கள், அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதா, எப்போது கிடைக்கும் என்பது போன்ற விபரங்களை ஆன்லைனில் செக் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | PF கணக்கில்... அதிகபட்ச ஓய்வூதியம் பெறுவது எப்படி... EPFO விதிகள் கூறுவது என்ன...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ