ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் பழைய நிறுவனத்திலுள்ள வேலையை விட்டு, புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின்னர் அந்த ஊழியரது பிஎஃப் கணக்கிலுள்ள முழுத் தொகையையும் திரும்பப் பெற்றால் அது அவருக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.  புதிய வேலைக்கு சென்ற பிறகு நீங்கள் இதுபோன்று பிஎஃப் கணக்கிலுள்ள பணத்தை எடுப்பது உங்கள் எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பெரும் நிதி மற்றும் சேமிப்பில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.  உங்கள் பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்துடன் இணைப்பது தான் புத்திசாலித்தனமான வேலையாகும்.  ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறினாலும் அல்லது சில காரணங்களால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும், நீங்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு உங்கள் பி.எஃப் கணக்கை விட்டுவிடலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | EPF சந்தாதாரர்களுக்கு சூப்பர் செய்தி: கணக்கில் பெரிய தொகை வரும், இப்படி செக் செய்யலாம்



மேலும் பிஎஃப் பணம் தேவையில்லை என்றாலும் அந்த கணக்கிலுள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.  ஏனெனில் வேலையை விட்டு வெளியேறிய பிறகும், உங்கள் பிஎஃப் மீதான வட்டி தொடர்ந்து பெறப்படுகிறது.  புதிய வேலைவாய்ப்பு கிடைத்தவுடன் அந்த பிஎஃப் கணக்கை நீங்கள் உங்களின் புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம்.  பிஎஃப் கணக்கு வட்டி முப்பத்தி ஆறு மாதங்களுக்கு அதாவது வேலையை விட்டு வெளியேறிய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கிடைக்கும்.  இதில் முதல் முப்பத்தி ஆறு மாதங்களுக்கு பங்களிப்பு இல்லை என்றால், அந்த ஊழியரின் பிஎஃப் கணக்கு செயல்படாத கணக்கு என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுவிடும்.  உங்கள் பிஎஃப் கணக்கை செயலில் வைத்திருக்க 3 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் சிறிது தொகையை எடுத்திருக்க வேண்டும்.


அரசின் விதிகளின்படி, பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் பங்களிப்பு செய்யாவிட்டால், உங்கள் பிஎஃப் கணக்கு செயலிழக்காது.  ஆனால் பங்களிப்பு செய்யப்படாத இந்த காலகட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.  மேலும் உங்களது பிஎஃப் கணக்கு செயலிழந்த பிறகும் நீங்கள் க்ளைம் செய்யவில்லை என்றால், அந்தத் தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு (எஸ்சிடபுள்யூஎஃப்) மாற்றப்படும்.


மேலும் படிக்க | EPFO Alert: இதை செய்யாவிட்டால் உங்கள் இபிஎஃப் கணக்கு தானாக மூடப்படலாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ