உங்கள் நிறுவனம் தொகையை பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? செக் செய்வது எப்படி?
EPFO Update: நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? இதை எப்போதாவது நீங்கள் செக் செய்துள்ளீர்களா?
EPFO Update: நீங்கள் அலுவலக பணிகளில் வேலை செய்யும் நபராக இருந்தால், சில முக்கிய விதிகளை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மாத சம்பளத்தில் பணிபுரியும் அனைவருக்கும் மாதா மாதம் பிஎஃப் கழிக்கப்படுகின்றது. ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து இதற்கான 12 சதவிகிதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதே அளவு தொகையை நிறுவனமும் அளிக்கின்றது.
ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் பணியாளரின் சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து அவரது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இது தவிர, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு ஈடான தொகையை நிறுவனமும் ஊழியரின் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்கிறது. இந்த தொகைக்கு இபிஎஃப்ஓ வட்டியையும் வழங்குகிறது.
ஆனால் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் உங்கள் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்கிறது என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா? இதை எப்போதாவது நீங்கள் செக் செய்துள்ளீர்களா? உங்கள் நிறுவனம் தங்கள் பங்களிப்பை இபிஎஃப்ஓ கணக்கில் செலுத்துகிறார்களா என்பதை செக் செய்வதற்கான வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பிஎஃப் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் உள்ள பிஎஃப் தொகையை இந்த வழியில் செக் செய்யலாம்:
ஸ்டெப் 1
- பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்வதில்லை. நிறுவனம் தொகையை டெபாசிட் செய்கிறதா இல்லையா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கலாம். இதை உங்கள் பாஸ்புக் மூலம் செய்யலாம்.
- பாஸ்புக்கை செக் செய்ய, முதலில் நீங்கள் EPFO இன் பாஸ்புக்கின் அதிகாரப்பூர்வ போர்ட்டலான passbook.epfindia.gov.in/MemberPassBook/login க்குச் செல்ல வேண்டும்.
ஸ்டெப் 2
- இபிஎஃப் பாஸ்புக் வலைத்தளத்திற்கு சென்றவுடன் அதில் லாக் இன் செய்ய வேண்டும்.
- இதற்கு முதலில் உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டும்.
- பின்னர் இங்கே பாஸ்வர்டை உள்ளிடவும். அதன் பிறகு திரையில் கொடுக்கப்பட்ட கேப்ட்சா குறியீட்டை உள்ளிடவும்.
மேலும் படிக்க | பண்டிகை காலத்தில் பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்தது! அதிர்ச்சியா இல்லை ஆறுதலா?
ஸ்டெப் 3
- பின்னர் ‘சைன் - இன்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின் கணக்கில் லாக் இன் செய்வீர்கள்.
- இப்போது இங்கே உங்கள் பாஸ்புக் தகவலைக் காண்பீர்கள்
- இந்த UAN எண்ணில் ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்புக் இருந்தால், அவை அனைத்தும் இங்கே தெரியும், ஒன்று மட்டும் இருந்தால், ஒன்று மட்டுமே தெரியும்.
ஸ்டெப் 4
- பின்னர் நீங்கள் சரிபார்க்க விரும்பும் பாஸ்புக் மீது கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, பாஸ்புக் உங்கள் முன் திறக்கப்படும். அதப் பிறகு ஒவ்வொரு மாதமும் உங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை இங்கே பார்க்கலாம்.
- டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு பெறப்பட்ட வட்டி உள்ளிட்ட பிற தகவல்களையும் இங்கே பார்க்கலாம்.
இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. PF கணக்கை நிர்வகிக்கும் நிறுவனமான இபிஎஃப்ஓ (EPFO), உங்கள் பிஎஃப் கணக்கை ஆன்லைனில் சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது. சந்தாதாரர்களின் வட்டி பணம் மிக விரைவில் அவர்களது பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிஎஃப் தொகைக்கு 8.15 சதவீத வட்டிக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வட்டி தொகை விரைவில் கணக்கில் வந்துவிடும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ