PF கணக்கில் உள்ள தொகையை அவசர தேவைக்கு எடுப்பது எப்படி? எளிய முழு செயல்முறை இதோ
EPFO Update: இந்தியாவில், சுமார் ஆறு கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) உள்ளனர். EPFO இன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் மூலம் இவர்கள் அனைவரும் பயனடைவார்கள்.
EPFO Update: PF உறுப்பினரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, சில விதிகளை எளிமையாக்கியுள்ளது. இபிஎஃப் உறுப்பினர்களின் (EPF Members) வசதியை விரிவுபடுத்துவதற்காக வீட்டுவசதி, மருத்துவம், கல்வி, திருமணம் ஆகிய காரணங்களுக்காக பணம் எடுக்கும் போது, தானியங்கி முறையில் பணத்தை அளிப்பதற்கான (Auto Mode Settlement) விதிகள் தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் இபிஎஃப் உறுப்பினர்கள் பணத்தை எளிதாக எடுக்க வழிவகை செய்வதே இதன் நோக்கமாகும்.
EPF Partial Withdrawal:
இந்தியாவில், சுமார் ஆறு கோடி இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) உள்ளனர். EPFO இன் புதிய எளிமைப்படுத்தப்பட்ட விதிகள் மூலம் இவர்கள் அனைவரும் பயனடைவார்கள். முன்னதாக, தகுதி நிலை, KYC நிலை, வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உறுப்பினர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இபிஎஃப் கணக்கில் (EPF Account) பணத்தை எடுக்க சுமார் 15-20 நாட்கள் ஆகும். ஆனால் இப்போது தானியங்கி அமைப்பு மூலம் மூன்று முதல் நான்கு நாட்களுக்குள் பணத்தை உறுப்பினர்கள் எளிதாக எடுத்து விடுகிறார்கள்.
EPF Partial Withdrawal: கணக்கில் உள்ள தொகையில் பகுதியளவு தொகையை க்ளெய்ம் செய்வதற்கான தகுதிகள் என்ன?
EPFO 2020 ஆம் ஆண்டில் ஆட்டோ-மோட் செட்டில்மென்ட் வசதியை தொடங்கியது. முன்பு பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே பகுதியளவு பணத்தை க்ளெய்ம் செய்ய முடிந்தது. எனினும், தற்போது இந்த வரம்பு கல்வி, வீட்டு வசதி, திருமணம் போன்ற தெவைகளுக்காகவும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
EPF Partial Withdrawal: எவ்வளவு பணத்தை க்ளெய்ம் செய்ய முடியும்?
பிஎஃப் உறுப்பினர்கள் (PF Members) மேற்கூறிய காரணங்களுக்காக ரூ.1 லட்சம் வரை கோர முடியும். முன்னதாக, இந்த வரம்பு ரூ.50,000 வரை இருந்தது.
EPF Partial Withdrawal: PO தொகையை க்ளெய்ம் செய்வதற்கான வழிமுறை:
- முதலில் கடவுச்சொல் மற்றும் யுனிவர்சல் கணக்கு எண் (UAN) பயன்படுத்தி EPFO போர்ட்டலில் லாக் இன் செய்யவும்.
- 'Online Services' பிரிவில் சென்று 'claim' ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் கணக்கு விவரங்களைச் சரிபார்த்து, 'Proceed for online claim' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதன் பிறகு திரையில் ஒரு புதிய பக்கம் தோன்றும். 'PF advance form 31' என்பதை செலக்ட் செய்யவும்.
- 'PF account' என்பதைத் தேர்ந்தெடுத்து, முன்கூட்டிய பணம் கோருவதற்கான காரணம், முகவரி போன்ற தொடர்புடைய விவரங்களை நிரப்பவும்.
- உங்கள் காசோலை புத்தகம் அல்லது பாஸ்புக்கின் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை இப்போது பதிவேற்ற வேண்டும்.
- உங்கள் சம்மதத்தை வழங்கி, அதை உங்கள் 'ஆதார் கார்டு' மூலம் சரிபார்க்கவும்.
- அதன் பிறகு இது உங்கள் முதலாளி / நிருவனத்திடம் ஒப்புதலுக்காகச் செல்லும்.
- ஆன்லைன் சேவைகள் மூலம் க்ளெய்ம் நிலையை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
மேலும் படிக்க | NPS -இல் பணி ஓய்வுக்கு முன்னரே பணம் எடுக்க முடியுமா? இதற்கான விதிமுறை என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews