8வது ஊதியக்குழு... மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: 44% ஊதிய உயர்வு, அலவன்சுகளில் ஏற்றம் கிடைக்குமா?

8th Pay Commission: 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. இப்போது 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. 

8th Pay Commission: பொதுவாக மத்திய அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழுவை அமைக்கின்றது. இதுவரை 7 ஊதியக் கமிஷன்களை அரசாங்கம் அமைத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2016-ம் ஆண்டு இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் இப்போது அரசாங்கம் 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பை வெளியிட்டு அதை அமைத்தால், 2026 -இல் இது அமலுக்கு வரக்கூடும். இதற்கிடையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

1 /10

மத்திய அரசு ஊழியர்கள் 8வது ஊதியக்குழுவின் அமலாக்கத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார்கள். இது குறித்து சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஏதாவது அறிவிப்பு வரும் என்ற எதிர்பார்ப்ப்பு இருந்த நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. எனினும், ஊழியர்களின் எதிர்பார்ப்பு இன்னும் தொடர்கிறது.

2 /10

8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ஊழியர் சங்கங்களும், அரசு அமைப்புகளும் நிதி அமைச்சகத்துக்கு, பலமுறை கடிதம் எழுதி தங்கள் தேவைகளை பற்றி தெரிவித்துள்ளன. அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டால், அது நிதி ரீதியாக மிக உதவியாக இருக்கும் என்ற கருத்தையும் அவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

3 /10

இதற்கிடையில், 8வது ஊதியக்குழுவின் உருவாக்கம் குறித்து ஒரு மிகப்பெரிய அப்டேட் ஒன்று வந்துள்ளது. இது தொடர்பாக அரசாங்க அமைச்சர் ஒருவர் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது தவிர சில நாட்களுக்கு முன்னர் நிதி செயலாளர் டிவி சோமநாதனும் ஒரு முக்கியமான கருத்தை வெளியிட்டார். இவற்றை பற்றி இங்கே காணலாம்.

4 /10

8வது ஊதியக்குழு தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி சட்டசபையில் ஒரு பெரிய விஷயத்தை கூறியுள்ளார். ஒரு கேள்விக்கு பதிலளித்த பங்கஜ் சவுத்ரி, புதிய ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக அரசுக்கு ஊழியர் சங்கங்கள் சார்பில் கடிதங்களும் கோரிக்கைகளும் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், ஜூன் 2024 இல் 8வது ஊதியக் குழுவை அமைப்பதற்கு இரண்டு முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளன என்றார். எனினும், தற்போது அரசாங்கம் 8வது ஊதியக்குழுவை பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

5 /10

முன்னதாக , பட்ஜெட்டைத் தொடர்ந்து, ஒரு செய்தி சேனலுக்கு பேட்டியளித்த நிதிச் செயலர் டிவி சோமநாதன், 8வது ஊதியக் குழு அமலுக்கு வருவதற்கு இன்னும் கால அவகாசம் உள்ளது என்றார். "8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 அன்று வரவேண்டுயுள்ளது. நாம் தற்போது 2024 இல் இருக்கிறோம். அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார். நிதிச் செயலர் இப்படி கூறியது, சிறிது காலம் கழித்து அரசு இதற்கான அறிவிப்பை வெளியிடக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.   

6 /10

பொதுவாக மத்திய அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழுவை அமைக்கின்றது. இதுவரை 7 ஊதியக் கமிஷன்களை அரசாங்கம் அமைத்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 7வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2016-ம் ஆண்டு இதை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

7 /10

அந்த வகையில் இப்போது அரசாங்கம் 8வது ஊதியக்குழுவுக்கான அறிவிப்பை வெளியிட்டு அதை அமைத்தால், 2026 -இல் இது அமலுக்கு வரக்கூடும். இதற்கிடையில் ஃபிட்மெண்ட் ஃபாக்டரை அதிகரிப்பது குறித்து கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தற்போது மத்திய அரசு ஊழியர்கள் 2.57 மடங்கு ஃபிட்மெண்ட் ஃபாக்டரை பெற்று வருகிறார்கள். இதை 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.  

8 /10

7வது ஊதியக் குழுவில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 மடங்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன் காரணமாக அடிப்படை சம்பளம் 18,000 ஆக வைக்கப்பட்டது. ஃபிட்மெண்ட் ஃபேக்டரை 3.68 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்று ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு அப்போது அதை ஏற்கவில்லை. 2.57 ஃபிட்மண்ட் ஃபேக்டரிலேயே பே மேட்ரிக்ஸ் (Pay Matrix) தயாரிக்கப்பட்டது. எட்டாவது ஊதிய குழுவிலாவது ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 3.68 ஆக அதிகரிக்கப்படும் என்று ஊழியர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இதன் தாக்கம் நேராக அடிப்படை ஊதியத்தில் இருப்பதால் இதை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியமாக கருதப்படுகின்றது.

9 /10

8வது ஊதியக்குழு அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் மாற்றம் இருக்கும். இது தவிர ஊழியர்களின் அகவிலைப்படி (DA), வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு (TA) போன்ற பல்வேறு சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகளிலும் ஏற்றம் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்தமாக அவர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

10 /10

பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது அடுத்த ஊதியக்கமிஷனுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.