EPFO Update: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO -இலிருந்து ஒரு பெரிய செய்தி சமீபத்தில் வந்தது. EPFO சீர்திருத்தங்களின் மதிப்பாய்வு தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளர் சுமிதா தவ்ரா, EPFO ​​இல் சீர்திருத்தங்கள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் CPFC நீலம் ஷமி ராவ் மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் EPFO ​​இன் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செட்டில்மென்ட்களை தானியக்க முறையில் அதாவது ஆட்டோமேடிக் முறையில் செயல்படுத்துதல் மற்றும் க்ளெய்ம்களை உடனடியாக செலுத்துவதற்கான காலக்கெடுவை குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை EPFO சமீபத்தில் எடுத்திருந்தது. இந்த நடவடிக்கைகளை திருமதி தாவ்ரா பாராட்டினார். நோய்கள், கல்வி, திருமணம் மற்றும் வீட்டு வசதிக்காக ரூ. 1 லட்சம் வரையிலான அட்ன்வான்ஸ் க்ளைம்களுக்கான தானியங்கி தீர்வு முறையை EPFO ​​செயல்படுத்தியுள்ளது.


ஏறத்தாழ ரூ.25 லட்சம் மதிப்பிலான அட்வான்ஸ் க்ளைம்கள் தானியங்கி செயல்முறைக்குப் பிறகு தீர்க்கப்பட்டுள்ளன. இதுவரை தீர்க்கப்பட்ட நோய்களுக்கான க்ளெய்ம்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை தாமாகவே, அதாவது மனித தலையீடு இல்லாமல் செட்டில் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், இப்போது க்ளெய்ம்கள் விரைவாக தீர்க்கப்படுகின்றன. இவற்றில் அதிக எண்ணிக்கையிலான க்ளெய்ம்கள் இப்போது மூன்று நாட்களுக்குள் தீர்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உறுப்பினர்களின் கேஒய்சி ஆதார் இணைக்கப்பட்ட கணக்குகளுக்கான காசோலை புத்தகம் / பாஸ்புக் வங்கி கணக்கில் பதிவேற்றம் செய்வது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த ஒரு மாதத்தில் ஏறத்தாழ 13 லட்சம் க்ளெய்ம்களை விசாரிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இதனால் செயலாக்க நேரம் வெகுவாக குறைந்துள்ளது.


மேலும் படிக்க | சிறுகக் கட்டி பெருக வாழ வகை செய்யும் ஓய்வூதிய திட்டங்கள்! டாப் 10 லிஸ்ட்!


EPFO இன் சீர்திருத்தங்கள்


முழுமையாக இல்லாத க்ளெய்ம்கள் திரும்ப அனுப்பப்படுவது, தகுதியற்ற க்ளெய்ம்கள் நிராகரிக்கப்படுவது போன்ற விஷயங்களில் இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவற்றை பற்றி சரியாக புரிந்துகொள்ள, அதற்கான செயல்முறையை EPFO எளிதாக்கியுள்ளது. தானியங்கி பரிமாற்றங்களின் எண்ணிக்கையில் மூன்று மடங்கு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 2024 இல் 2 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை மே 2024 இல் 6 லட்சமாக அதிகரித்துள்ளது. திருமதி தாவ்ரா, முறையான சீர்திருத்தங்களுக்காக இதுபோன்ற செயலூக்கமான நடவடிக்கைகளை தொடர EPFO ​​க்கு அறிவுறுத்தினார்.


EPFO ஆனது அதன் பயன்பாட்டு மென்பொருளை அனைத்து உறுப்பினர்களுக்கும் UAN அடிப்படையிலான ஒற்றைக் கணக்கியல் அமைப்புடன் மேம்படுத்தும் செயல்பாட்டில் உள்ளது. மேலும், குறைந்தபட்ச மனித தலையீட்டுடன் க்ளெய்ம்களை விரைவாகத் தீர்ப்பதற்கான ஆட்டோமேஷன் முறையை செயல்படுத்தி வருகிறது.


மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையம் (Centre For Development Of Advanced Computing)


EPFO -வின் புதிய மென்பொருள் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்துடன் (CDAC) ஆலோசனையுடன் உருவாக்கப்பட்டு வருகிறது. சமூகப் பாதுகாப்பு விரிவாக்கம் மற்றும் எளிமையான செயல்முறைகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான புதிய முயற்சிகளின் அவசியம் குறித்தும் ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.


வழக்கு மேலாண்மை மற்றும் தணிக்கையில் செயல்பாட்டு சீர்திருத்தங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திறம்பட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பிற்கு அதிகாரிகள் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் பணியாற்றுமாறு திருமதி தாவ்ரா வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | Budget 2024: 8வது ஊதியக்குழ், பழைய ஓய்வூதிய திட்டம்.. நிதியமைச்சர் முன் வைக்கபட்டுள்ள கோரிக்கைகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ