Budget 2024: இன்னும் சில நாட்களில் நிதி அமைச்சர் (Finance Minister) நிர்மலா சீதாராமன் நாட்டின் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சிக்காலத்தின் முதல் பெட்ஜெட் இது. இந்த பட்ஜெட் குறித்து மக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. சாமானியர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகையில் பல சலுகைகள் அளிக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. பல தரப்பிலிருந்து நிதியமைச்சருக்கு பல வித கோரிக்கைகளும் வந்த வண்ணம் உள்ளன.
Union Budget 2024: நிதி அமைச்சருக்கு கிடைத்துள்ள முக்கிய கோரிக்கைகள்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitharaman) அவர்கள் கடந்த சில நாட்களாகவே பட்ஜெட் குறித்த பல கோரிக்கைகளை பல தரப்பு மக்களிடமிருந்தும் பெற்று வருகிறார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.
- பணக்காரர்களுக்கு சொத்து வரி விதிக்க வேண்டும்
- பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப கொண்டு வர வேண்டும்
- சம்பளதாரர்களுக்கு வருமான வரியில் கூடுதல் விலக்கு அளிக்க வேண்டும்
- வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 8வது ஊதியக்குழு அமைக்க வேண்டும்
- ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்த வேண்டும்
- MNREGA இல் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும்
- அரசு துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கான தடையை நீக்க வேண்டும்
திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை
பாரதிய மஸ்தூர் சங்கம், ஹிந்த் மஸ்தூர் சபா, ஐஎன்டியுசி, ஏஐடியுசி சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். ஹிந்த் மஸ்தூர் சபாவின் பொதுச் செயலாளர் ஹர்பஜன் சிங், 10 தொழிற்சங்கங்கள் நிதியமைச்சரிடம் ஒரு கூட்டு முன்மொழிவை அளித்ததாக ஊடகங்களிடன் கூறினார். வேலையில்லா திண்டாட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஷாக்கடிக்கும் கரண்ட் திருட்டு! வருஷத்துக்கு ரூ.600 பில்லியன் மின்சாரம் இழப்பு!
பெரும் பணக்காரர்கள் மீதான சொத்து வரி
10% பெரும் பணக்காரர்களுக்கு 2% செல்வ வரி விதிக்க வேண்டும் என்ற கருத்தும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த பணத்தை ஏழைகள் மற்றும் தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப அமல்படுத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'தொழிலாளர் சீர்திருத்தம் என்ற பெயரில் எதையும் செய்வதற்கு முன், இந்திய தொழிலாளர் மாநாட்டின் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். இது 2015 முதல் நடத்தப்படவில்லை. அரசுத் துறைகளில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் MNREGA யில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம்' என்று ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தொழிற்சங்க தலைவர்கள் கூறினார்கள்.
பணவீக்கக் கட்டுப்பாடு
எட்டாவது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைப்பது, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதை நிறுத்துவது, அக்னிவீர் திட்டத்தை நிறுத்துவது, பணவீக்கத்தைக் (Inflation) கட்டுப்படுத்துவது போன்றவை குறித்தும் பேசப்படதாக ஏஐடியூசியின் அகில இந்தியச் செயலர் ரமேஷ் பராஷர் தெரிவித்தார். ஏழைகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. அதே நேரத்தில், பிரதமர் விஸ்வகர்மா, ஜன் சுரக்ஷா மற்றும் முத்ரா யோஜனா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்வதற்காக செவ்வாய்க்கிழமை பொதுத்துறை வங்கிகளின் (பிஎஸ்பி) தலைவர்களின் கூட்டத்தை நிதி அமைச்சகம் அழைத்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ