EPFO Latest Update: விரைவில் நல்ல செய்தி, கணக்கில் வரும் பம்பர் தொகை
EPFO Latest Update: EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் விரைவில் நல்ல செய்தியைப் பெற உள்ளனர்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) விரைவில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறந்த செய்தியை வழங்க உள்ளது. அதன்படி ஊழியர்களின் கணக்கில் 40 ஆயிரம் ரூபாய் விரைவில் மாற்றப்படும். ஒரு பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர் கணக்கில் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்தால், விரைவில் ரூ.40 ஆயிரம் வட்டி அவரது கணக்கிற்கு மாற்றப்படும். இந்தப் பணம் உங்கள் கணக்கிற்கு மாற்றப்பட்டதா இல்லையா என்பதை வீட்டில் இருந்தபடியே எளிதாகக் கண்டறியலாம். எப்படி என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஊழியர்களின் கணக்கில் விரைவில் பணம் வரும்
நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் பிஎஃப் கணக்கில் பங்களிக்கின்றனர். உங்கள் சம்பளத்தில் பிஎஃப் பணம் பிடித்தம் செய்யப்பட்டால், விரைவில் உங்கள் கணக்கிற்கு ஒரு பெரிய தொகை மாற்றப்படும்.
மேலும் படிக்க | EPFO New Update: EPFO வெளியிட்டுள்ள முக்கியமான 5 புதிய விதிகள்!
இந்த ஊழியர்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்படும்
இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ) மிக விரைவில் பிஎஃப் வட்டி பணத்தை ஊழியர்களின் கணக்கில் மாற்ற உள்ளது. அத்தகைய ஊழியர்கள் தங்கள் பிஎஃப் கணக்கில் 5 லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்து இருந்தால், அவர்களுக்கு வட்டியாக 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தவகையில் இந்த வட்டித் தொகை விரைவில் பிஎஃப் கணக்கிற்கு மாற்றப்படும் என பல ஊடகங்களில் செய்திகளாக வெளியாகி வருகின்றன.
வீட்டில் இருந்தபடியே பிஎஃப் கணக்கு இருப்பைச் அல்லது பேலன்ஸை சரிபார்க்கலாம்
* உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பைச் சரிபார்க்க, முதலில் நீங்கள் epfindia.gov.in க்குச் செல்ல வேண்டும்.
* இதற்குப் பிறகு, 'உங்கள் இ.பி.எஃப் இருப்பை அறிய இங்கே கிளிக் செய்யவும்' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இதற்குப் பிறகு நீங்கள் epfoservices.in/epfo/ என்ற பக்கத்திற்கு வழிமாற்று இணைப்பு மூலம் செல்ல வேண்டும்.
* இதற்குப் பிறகு நீங்கள் 'உறுப்பினர் இருப்புத் தகவல்' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இதற்குப் பிறகு, உங்கள் பிஎஃப் கணக்கு எண் மற்றும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை இங்கே உள்ளிட வேண்டும்.
* இதற்குப் பிறகு நீங்கள் உங்கள் மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் மாநிலத்தின் இ.பி.எஃப்.ஓ அலுவலகத்தின் இணையதள இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.
* அதன் பிறகு நீங்கள் 'சமர்ப்பி' என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இந்த முழு செயல்முறையும் முடிந்தவுடன், உங்கள் பிஎஃப் கணக்கு இருப்பு அல்லது பேலன்ஸ் திரையில் தென்படும்.
மேலும் படிக்க | ஆகஸ்ட் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: உங்கள் வாழ்வில் இவற்றின் தாக்கம் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ