EPF Withdrawal Rules: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. அலுவலக பணிகளில் இருக்கும் பெரும்பான்மையானோருக்கு மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு இபிஎஃப் கணக்கில் பங்களிக்கப்படுகின்றது. பணியாளர் செலுத்தும் அதே தொகையை முதலாளி / நிறுவனமும் செலுத்துகின்றன. இது மறைமுகமாக பணியாளர்களுக்கு எதிர்காலத்திற்கான ஒரு நல்ல சேமிப்பாக அமைகின்றது. மிகவும் பாதுகாப்பான, நல்ல வருமானத்தை அளிக்கக்கூடிய ஒரு முதலீட்டு திட்டமாக இது உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஃப் உறுப்பினர்கள் சில முக்கிய விஷயங்களை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். பிஎஃப் நிதியிலிருந்து பணத்தை எடுக்க (EPF Withdrawal), சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுவாக பணி ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையும் பிஎஃப் நிதியிலிருந்து எடுக்கப்படுகிறது. ஆனால் பிஎஃப் உறுப்பினர் விரும்பினால், அதை பணி ஓய்வுக்கு முன்னரும் எடுக்கலாம். இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 


எதிர்காலத்தில் முதலீடு செய்ய மக்கள் பல முதலீட்டு விருப்பங்களை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் ஒன்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆகும். இதன் மூலம் பணி ஓய்வுக்குப் பிறகும் ஓய்வூதியமாக வருமானம் கிடைக்கும். இதில் பணியாளர்கள் மற்றும் நிறுவனம் என இரு தரப்பும் பங்களிப்பை அளிக்கின்றன. இந்த நிதியில், பணியாளர் ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் 12 சதவீதத்தை பங்களிப்பதோடு, முதலாளி / நிறுவனத்தின் தரப்பிலும் 12 சதவீத பங்களிப்பு அளிக்கப்படுகின்றது. இதில் முதலீட்டுக்கான வட்டியும் அரசால் வழங்கப்படுகிறது. எனினும், பணி ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் நிதியிலிருந்து தொகையை எடுத்தால், அதற்கு வரி செலுத்த வேண்டியிருக்கும்.


மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு... இணைய வங்கி சேவையை பயன்படுத்த இயலாது!


PF இலிருந்து பணம் எடுப்பதற்கு எப்போது வரி விதிக்கப்படுகிறது?


PF நிதியில் இருந்து பணத்தை எடுக்க, சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். பொதுவாக, ஓய்வுக்குப் பிறகுதான் முழுத் தொகையும் நிதியிலிருந்து எடுக்கப்படுகிறது. எனினும், ஒரு பிஎஃப் உறுப்பினர் விரும்பினால், அதை நேரத்திற்கு முன்பே எடுக்கலாம். அதற்கு அவர்கள் வரியும் செலுத்த வேண்டியிருக்கும். 90 சதவீத தொகையை ஓய்வுக்கு முன் எடுக்கலாம். 


முழுத் தொகையையும் எப்போது எடுக்க முடியும்? 


ஒரு நபர் தனது வேலையை இழந்தால், அப்போது அவர் தனது பிஎஃப் நிதியில் இருந்து முதல் முறையில் 75 சதவீத தொகையை எடுக்கலாம். இதற்குப் பிறகு, அந்த நபர் இரண்டாவது முறையில் முழுத் தொகையையும் எடுக்கலாம். விளக்கமாக சொல்ல வேண்டுமானால் வேலை இழந்த நபருக்கு ஒரு மாதத்திற்கு வேலை கிடைக்காவிட்டால், வட்டிப் பணத்தில் 75 சதவிகிதம் வரை எடுக்கலாம். மேலும், இரண்டாவது மாதம் முடிந்த பிறகு, 100% பணத்தை எடுக்கலாம். இந்த தொகையை நீங்கள் உங்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.  


பிஎஃப் நிதியில் இருந்து பணம் எடுப்பதற்கு முன், சில முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம். அதன் பிறகுதான் நிபந்தனைகளைப் பின்பற்றி PF இலிருந்து நிதியை எடுக்க முடியும். 


TDS எப்போது கழைக்கப்படாது? 


இதில் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு கோரலாம். ஒரு நிறுவனத்தில் ஐந்து வருடங்கள் பணியாற்றுவதற்கு முன்னரே ஒருவர் PF இலிருந்து பணத்தை எடுத்தால், ​​அந்தத் தொகையில் TDS கழிக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு PF இலிருந்து பணம் எடுக்கப்பட்டால், எந்த வரியும் வசூலிக்கப்படாது.


மேலும் படிக்க | FD மீதான வட்டி 1.25% அதிகரிப்பு... பிரபல வங்கி கொடுத்துள்ள இன்ப அதிர்ச்சி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ