புதுடெல்லி: அடுத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நாட்டில் 6 விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்னெடுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறுகிறார் ஜீ பிசினஸ்-இன் நிர்வாகத் ஆசிரியர் அனில் சிங்வி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகாரப்பூர்வ ஆதாரங்களையும், தகவல்களையும் மேற்கோள் காட்டும் அவர், ராஞ்சி, திருச்சி, புவனேஷ்வர், ராய்ப்பூர், இந்தூர் மற்றும் அமிர்தசரஸ் எனஆறு விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படலாம் என்று அவர் கூறினார். இந்த விமான நிலையங்கள் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்தின் (Airports Authority of India (AAI)) கீழ் உள்ளன. 


Public-Private-Partnership (PPP) மாதிரியில் இந்த ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.


ஏற்கனவே இதற்கான அமைச்சரவைக் குறிப்பைத் தயாரித்துவிட்ட விமான போக்குவரத்து அமைச்சகம், அதனை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது. அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும். 


Read Also | எந்த தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா?


உள்கட்டமைப்பு துறையில் முதலீடுகள் மற்றும் தனியார்மயமாக்கல் குறித்து பிரதம அலுவலகம் மே மாதத்தில் மறுஆய்வுக் கூட்டம் நடத்தியது. இந்த ஆறு விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக தேவையான அனைத்து பணிகளையும் முடிப்பதற்காக 3 மாத கால அவகாசத்தை அப்போது பிரதமர் அலுவலகம் நிர்ணயித்திருந்தது. அந்தக் காலக்கெடு ஆகஸ்ட் 15 க்குள் முடிவடைகிறது என்பதால், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இதற்கான ஒப்புதல் பெற வாய்ப்புள்ளது.


ஒப்புதல் கிடைத்ததும், இந்த விமான நிலையங்களை ஏலம் விடும் செயல்முறை தொடங்கும். 2018 ஆம் ஆண்டில், 12 விமான நிலையங்களை தனியார் மயமாக்க அரசாங்கம் முடிவு செய்தது. லக்னோ, குவஹாத்தி, அகமதாபாத் விமான நிலையங்கள் உட்பட ஆறு விமான நிலையங்களுக்கு ஏற்கனவே முதல் கட்டத்தில் ஒப்புதல் கிடைத்துவிட்டது. 


இந்த விமான நிலையங்களை அதானி குழுமம் அதிக விலைக்கு ஏலம் எடுத்தது. ஆறு விமான நிலையங்களும் PPP மாதிரியின் கீழ் அதானி குழுமத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன. 


விமான நிலையங்களை கையகப்படுத்தும் செலவு, அவற்றை மறுவடிவமைப்பு செலவு உட்பட இந்த 6 விமான நிலையங்களுக்கும் அதானி குழுமம் 3 லட்சம் கோடி ரூபாய் செலவிடவுள்ளது.