எந்த தபால்த்துறை திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா?

''சிறுகக் கட்டி பெருக வாழ்'' என்பது முதுமொழி. இந்த முதுமொழிக்கு என்பதற்கு ஏற்ப எந்த தபால் நிலைய திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா? 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 1, 2020, 11:56 AM IST
  • தபால் துறையின் சேமிப்புத் திட்டங்களில் 5 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம்...
  • PPFஇல், ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம்...
  • RD டெபாசிட் தொகைக்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை...
எந்த தபால்த்துறை திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா?  title=

புதுடில்லி: தபால்துறை சேவை வழங்கும் India Post இந்தியா போஸ்ட் கடிதங்களை விநியோகிக்கும் பணியையே பிரதான சேவையாகச் செய்து வந்தாலும், அதன் சேவைகள் விரிவானவை, பரவலாக பொதுமக்களுக்கு நன்மை அளிப்பவை...

''சிறுகக் கட்டி பெருக வாழ்'' என்பது முதுமொழியை நிதர்சனமாக்குகிறது இந்திய தபால்த்துறை. எந்த தபால்த்துறை திட்டங்களில் முதலீடு செய்தால் எளிதாக கோடீஸ்வரராக முடியும் தெரியுமா? 

தபால்துறையின் சேமிப்பு மிகவும் பாதுகாப்பானது நல்ல பலன் தருவது. எந்த சேமிப்பு திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் கோடீஸ்வர்ராக முடியும் என்பதை தெரிந்துக் கொண்டால் அனைவரும் செல்வந்தர்களே...  

தபால் துறையின் இந்த சேமிப்புத் திட்டங்களில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். வட்டி குட்டி போட்டு கோடிக்கணக்கில் அதிகரித்துவிடும் வாய்ப்புகள் கொண்ட திட்டங்களும் தபால்துறையில் இருக்கிறது.   

இந்த பட்டியலில் பொது வருங்கால வைப்பு நிதி PPF தொடர்ச்சியான வைப்புத்தொகை RD, தேசிய சேமிப்பு சான்றிதழ் NSC மற்றும் குறிப்பிட்டக் காலம் வரை பணத்தைப் போட்டு வைக்கும் Time Deposit (TD)  திட்டம் ஆகியவை அடங்கும்.  

Read Also | SBI சேமிப்பு கணக்கு: SBI YONO Appஇன் 'இன்ஸ்டா' அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்

ஆண்டுக்கு 1.5 லட்சம் ரூபாய் பிபிஎஃப் முதலீடு

PPFஇல், முதலீட்டாளர் ஆண்டுதோறும் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யலாம். அதாவது  மாதத்தில் நீங்கள் அதிகபட்சமாக 12,500 ரூபாய் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தின் முதிர்வு 15 ஆண்டுகள் என்றாலும் நீங்கள் 5-5 ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். இந்த திட்டத்தில், தற்போது, வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.1 சதவீதமாகும். ஆண்டுதோறும் 1.5 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் 25 ஆண்டுகள் சேமித்தால், உங்கள் மொத்த முதலீடு 37,50,000 ரூபாய் ஆகும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்வுக்கான தொகை 1.03 கோடி ரூபாயாக இருக்கும். கூட்டு வட்டியின் பலன் உங்கள் பணத்தை பல மடங்காக பெருக்கிவிடும்.  

டைம் டெபாசிட், அதாவது எஃப்.டி.யில் டெபாசிட் செய்வதற்கான அதிகபட்ச வரம்பு ஏதும் இல்லை.. தபால் நிலையத்தில் 5 ஆண்டு வைப்புத் திட்டங்களுக்கு ஆண்டுதோறும் 6.7 சதவீத வட்டி செலுத்தப்படுகிறது. இந்த திட்டத்தில் செய்யப்படும்  டெபாசிட் தொகை  15 லட்சம் என்றால் வட்டி விகிதம் ஆண்டுக்கு 6.7 சதவீதம். நீங்கள் 30 ஆண்டுகளில் ’நானும் கோடீஸ்வரன்’ என்று மார் தட்டிச் சொல்லலாம்.  

RD திட்டத்தில் மாதந்தோறும் எவ்வளவுத் தொகை வேண்டுமானாலும் செலுத்தலாம். நீங்கள் டெபாசிட் செய்யக்கூடிய அதிகபட்ச தொகைக்கு எந்தவித வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. பி.எஃப்.பைப் போலவே மாதந்தோறும் 12500 ரூபாய் செலுத்தினால், உங்களிடம் மிகப் பெரிய தொகை இருப்பில் இருக்கும். RDக்கு ஆண்டுதோறும் 5.8 சதவிகித கூட்டு வட்டி கிடைக்கும்.  அதிகபட்ச வருடாந்திர வைப்புத்தொகை  1,50,000 ரூபாய் என்றால்,  27 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்ந்து சுமார் 99 லட்சம் ரூபாய் கிடைக்கும். அதில் உங்கள் மொத்த முதலீடு 40,50,000 லட்சம் ரூபாயாக இருக்கும்.

NSCயில் முதிர்வு காலம் 5 ஆண்டுகள்
நீங்கள் என்.எஸ்.சியில் முதலீடு செய்தால், வருமான வரியின் 80 சி பிரிவின் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுக்கு 6.8 சதவீத வீதத்தில் வட்டி கிடைக்கும்.  வழக்கமாக சிறுசேமிப்புத் திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மதிப்பாய்வு செய்யப்படும். ஆனால் என்எஸ்சியில் முதலீடு செய்யும் போது இருக்கும் வட்டி விகிதமே ஐந்தாண்டு காலமும் அப்படியேத் தொடரும்.

Trending News