பேஸ்புக் இந்தியா ஊழியர்கள், இந்தியாவில் பணிபுரிந்து கொண்டே பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான, உண்மைக்கு புறம்பான தகவல்களை பதிவு செய்கின்றனர் என மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், பேஸ்புக் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு (Mark Zuckerberg) அனுப்பிய கடிதத்தில் எழுதியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மூத்த அமைச்சர்களுக்கு எதிராக பேஸ்புக் ஊழியர்கள் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதாக அவர் கடிதத்தில் எழுதியுள்ளார். பேஸ்புக் இந்தியா அணியில் உள்ள பல மூத்த அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிப்பவர்கள் என்ற தகவலும் தனக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் எழுதியுள்ளார்.


பேஸ்புக் மற்றும் பாஜக இடையே தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பேஸ்புக் இந்தியா ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தின் அடிப்படையில் பாகுபாட்டுடன் செயல்படுவதாக காட்டுவதாகக் கூறினார்.


பேஸ்புக்கில், பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் மரியாதை குறைவாக குறிப்பிட்டு பதிவுகள் வருவதையும், நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் நோக்குடனும் பல பதிவுகளை பார்க்கலாம் என்றார்.


2019 தேர்தலுக்கு முன்னர், பேஸ்புக் இந்தியா நிர்வாகம் வலதுசாரி சித்தாந்தத்தை ஆதரிப்பவர்களின் பேஸ்புக் பக்கங்களை நீக்குவது அல்லது முடக்குவது போன்ற வேலைகளைல் ஈடுபட்டது என்று பிரசாத் கடிதத்தில் எழுதியுள்ளார். பேஸ்புக் , நியாயமான வகையில் செயல்பட வேண்டும் என்று எழுதினார். எந்தவொரு நிறுவனத்திலும் பணிபுரியும் எந்த ஒரு தனிநபர்கள் தங்கள் விருப்பு வெறுப்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இது ஒரு நிறுவனத்தின் பொதுக் கொள்கையை பாதிக்கக்கூடாது என்று அவர் எழுதியுள்ளார்.


அரசியல் கட்சிகள் Facebook இந்தியாவுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள் என ரவி சங்கர் பிரசாத் கூறினார்


இந்த விவகாரம் தொடர்பாக தான் பல முறை பேஸ்புக் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும், ஆனால் எந்த பதிலும் வரவில்லை என்று கூறிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கோடிக்கணக்கான மக்களின் கருத்து சுதந்திரத்தில் தனிநபரின் அரசியல் கருத்துக்களை திணிப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றார்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும்: Piyush Goyalஇந்திய ரயில்வே 2030ம் ஆண்டிற்குள் சோலார் மயமாகும்: Piyush Goyal