சான் பிரான்சிஸ்கோ: நவம்பரில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, நிறுவனத்தின் பணியாளர்கள், பணியிடத்திற்குள் தொடர்பு கொள்வது தொடர்பான விதிகளை கடுமையாக்கியுள்ளது. ஊழியர்கள், தங்கள் சுயவிவரப் புகைப்படங்களில் அரசியல் தொடர்பான புகைபடங்களை வைப்பதற்குத் தடைவிதித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஊழியர்கள் தங்கள் சுயவிவரப் படங்களில் குறிப்பிட்ட அரசியல் வேட்பாளர்களை ஊக்குவிக்கும் படங்கள் மற்றும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் (Black Lives Matter) போன்ற குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒற்றுமையை வெளிப்படுத்துவதைத் தடுக்கும் என்று ஃபேஸ்புக் (Facebook) நினைப்பதாக Wall Street Journal பத்திரிகை தெரிவித்துள்ளது.


"பேஸ்புக்கின் உள் பணியிட தகவல்தொடர்பு கருவியில் சர்ச்சைக்குரிய சமூக தலைப்புகள் குறித்து ஊழியர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்"  


"எங்கள் ஊழியர்கள் அவர்களின் பணியிடத்தில் சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள் குறித்த விவாதங்களில் சேர விரும்புகிறார்கள் என்று அவர்களிடம் இருந்து தெரிந்துக் கொண்டோம்" என்று பேஸ்புக் செய்தித் தொடர்பாளர் ஜோ ஆஸ்போர்ன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


"எனவே, எங்கள் மக்களுக்கு குரல் மற்றும் தேர்வு இரண்டுமே இருப்பதை உறுதிசெய்ய எங்கள் கொள்கைகள் மற்றும் பணி கருவிகளைப் புதுப்பிக்கிறோம்."


கடந்த வாரம் பேசிய பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி, புதிய நடவடிக்கைகள் கறுப்பின ஊழியர்களும் பிற பிரதிநிதித்துவமற்ற சமூகங்களும் வேலைக்கு வரும்போது விரோதமான சூழலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் என்று கூறினார்.


தற்போதும், ஊழியர்கள் தங்கள் புகைப்படங்களைச் சுற்றியுள்ள பிரேம்கள் மூலம் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள முடியும். புதிய விதிகள் நிறுவனத்தின் துன்புறுத்தல் தொடர்பான வரையறையை விரிவாக கூறுகிறது.


"உணர்ச்சிகளை மதிக்காத, தரக்குறைவான அல்லது மற்றவர்களை இழிவுபடுத்தும் எந்தவொரு தகவல்தொடர்புகளையும் நிறுவனம் தடைசெய்யும். அதோடு மற்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு விரோதமான வேலை சூழல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறோம்" என்று நிறுவனம் தெரிவிக்கிறது.


Read Also | நீயா நானா? TikTok மீதான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளுக்கு ByteDance சவால்