FD வட்டி விகிதங்களை உயர்த்திய வங்கி! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
கோல்டன் இயர்ஸ் என்று அழைக்கப்படும் திட்டமானது மூத்த குடிமக்களுக்காக ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஒரு டெர்ம் பாலிசி திட்டமாகும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை தொடர்ந்து எஃப்டி எனப்படும் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த தொடங்கிவிட்டன. இந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்ட பிறகிலிருந்து ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. இதன்படி பொதுவான குடிமக்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படுவதோடு, மூத்த குடிமக்களுக்கான எஃப்டி வட்டி விகிதங்களை அதிகரிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி, ஊதியத்தில் பம்பர் அதிகரிப்பா?
மூத்த குடிமக்களுக்கு என்று பிரத்யேகமாக ஒரு திட்டம் வழங்கப்படுகிறது, கோல்டன் இயர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டமானது மூத்த குடிமக்களுக்காக ஐசிஐசிஐ வங்கி வழங்கும் ஒரு டெர்ம் பாலிசி திட்டமாகும். இந்தியாவில் குடியுரிமை பெற்ற எஃப்டி கணக்கு வைத்திருக்கும் மூத்த குடிமக்கள் குறிப்பிட்ட காலத்திற்கு 0.25% கூடுதல் வட்டி விகிதங்களை பெறுவார்கள், பின்னர் சில நாட்கள் கழித்து அவர்களுக்கு கூடுதலாக 0.50% வட்டி விகிதங்கள் கிடைக்கப்பெறும்.
சாதாரண குடிமக்களுக்கு எஃப்டிக்கான வட்டி விகிதமானது குறிப்பிட்ட காலத்திற்கு 5.75% ஆக கிடைக்கும், அதே சமயம் மூத்த குடிமக்களுக்கு எஃப்டிக்கான வட்டி விகிதம் கோல்டன் இயர்ஸ் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் முதல் பத்து ஆண்டுகள் வரை 6.50% ஆக கிடைக்கும். இந்த திட்டத்தின் கீழ் வைத்திருக்கும் டெபாசிட்கள் 5 ஆண்டுகள் 1 நாளுக்கு பிறகு அல்லது அதற்கு முன்பே திரும்ப பெறப்பட்டால் அதற்கான அபராத விகிதம் 1.25% ஆக இருக்கும். ஐசிஐசிஐ வங்கியின் அறிவிப்புப்படி, இந்த திட்டக்களத்தில் புதிதாக திறக்கப்படும் கணக்குகள் மற்றும் புதுப்பிக்கப்படும் கணக்குகளுக்கு கூடுதலான வட்டி விகிதங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஊழியர்களுக்கு மத்திய அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR