FD Rates Hike: இந்த தனியார் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
City Union Bank: தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி மே மற்றும் ஜூன் மாதங்களில் ரெப்போ விகிதத்தை இரண்டு முறை உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, அனைத்து வங்கிகளும் தொடர்ந்து தங்கள் வட்டி கடனை உயர்ந்தி வருகிறது. இதில் வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் என அனைத்து வகைக் கடன்களும் அடங்கும்.
இதனுடன், வங்கிகள் தங்கள் சேமிப்பு வங்கிக் கணக்கில் கிடைக்கும் வட்டி விகிதத்தையும் அதிகரித்துள்ளன. அதேபோல், வங்கிகள் தங்களின் எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. அதன்படி பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி வங்கி போன்ற பல வங்கிகள் தங்கள் எஃப்.டி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இதனுடன், தற்போது சமீபத்தில் சிட்டி யூனியன் வங்கியும் அதன் எஃப்.டி இன் வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | தேர்வு இல்லை..விண்ணப்ப கட்டணம் இல்லை..எஸ்பிஐ வங்கியில் வேலை!
இந்த நிலையில் சிட்டி யூனியன் வங்கி ரூ.2 கோடிக்கும் குறைவான எஃப்டிகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய விகிதங்கள் 20 ஜூன் 2022 அன்று அமல்படுத்தப்பட்டன. வங்கி பொது மக்களுக்கு 4 சதவீதம் முதல் 5.25 சதவீதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே நேரத்தில், சாதாரண மக்களை விட மூத்த குடிமக்களுக்கு வங்கி அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே சமீபத்திய கட்டணங்களை தெரிந்துக் கொள்வோம்-
சிட்டி யூனியன் வங்கி 2 கோடிக்கும் குறைவான எஃப்.டிக்கு இந்த வட்டியை தருகிறது
7 முதல் 14 நாட்கள் வரை - 4.00%
15 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 4.10%
46 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை -4.20%
181 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை - 4.25%
271 நாட்கள் முதல் 1 வருடம் -4.75%
365 நாட்கள் முதல் 399 நாட்கள் வரை - 5.25%
400 நாட்கள் - 5.40%
401 நாட்கள் முதல் 699 நாட்கள் வரை - 5.35%
700 நாட்கள் வரை - 5.55%
701 நாட்கள் முதல் 3 ஆண்டுகள் வரை - 5.30%
3 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை - 5.25%
இந்த வங்கிகள் எஃப்.டி வட்டி விகிதத்தை அதிகரித்தன
சிட்டி யூனியன் வங்கியைத் தவிர, பல வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளன. இதில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பெடரல் வங்கி, இண்டஸ்இந்த் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் எப்டி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாங்க் ஆப் பரோடா வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி, இனி அதிக லாபம் பெறலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR