பொருளாதாரத்தில் வலுவடையும் இந்தியா! அந்நிய செலாவணி கையிருப்பு உச்சத்தில்!

Foreign Exchange reserve: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $651.5 பில்லியன் என்ற அளவில் அதிகரித்து சாதனை புரிந்திருக்கிறது..
Indian economy: குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை, வலுவான சேவைகள் ஏற்றுமதி வளர்ச்சி, வலுவான பணம் அனுப்புதல் என இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $651.5 பில்லியன் என்ற அளவில் உயர்ந்துள்ளது. இதனால், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (current account deficit (CAD)) 2023-24 ஜனவரி - மார்ச் காலாண்டில் மிதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு என்பது மே 31 நாளன்று, 651.5 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவை எட்டியது. இந்தியாவின் வெளியுறவுத் துறை மீள்தன்மை இருக்கும் என்று கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர், ஒட்டுமொத்தமாக நமது அந்நிய செலாவணி தொடர்பான தேவைகள் சுலபமாக பூர்த்தியாகிவிடும் என்று தெரிவித்தார். இன்று புதுடெல்லியில் நடைபெற்ற நாணயக் கொள்கை கூட்டத்திற்குப் பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
2024ஆம் ஆண்டில், உலக அளவில் பணம் அனுப்புவதில் 15.2 சதவிகிதப் பங்கு இருக்கும் என்று இந்தியா எதிர்பார்க்கிறது. தற்போது இந்தியா, உலக அளவில் பணம் அனுப்புவதில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக, 2024-25 ஆம் ஆண்டிற்கான நடப்புக் கணக்குப் பற்றாக்குறை நிலையான அளவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சேவைத்துறை மற்றும் ஏற்றுமதிகள் வலுவாக உள்ளது. மென்பொருள் ஏற்றுமதி, பிற வணிக சேவைகள் மற்றும் சுற்றுலாத்துறையால் இந்தியப் பொருளாதாரம் வலுவாகி வருவதாக ரிசர்வ் வங்கியின் தலைவர் கூறினார். இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்களின் (global capability centres (GCC)) அபரிமிதமான உயர்வு, இந்தியாவின் மென்பொருள் மற்றும் வணிக சேவைகளால் இந்தியாவின் ஏற்றுமதித் துறை ஊக்கமடைந்துள்ளது.
மேலும் படிக்க | இதுவும் கடன் தான்! ஆனா டக்குன்னு கிடைக்கும்... திருப்பி செலுத்துவதும் ரொம்ப சுலபம்!
2023-24 ஆம் ஆண்டில் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (FPI) நிகர FPI வரவு 41.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது. இதில், 2024-25 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் உள்நாட்டு சந்தையில் நிகர விற்பனையாளர்களாக மாறியுள்ளனர் என்பதும், நிகர வெளியேற்றம் 5.0 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஜூன் 5 வரை) என்பதையும் சக்திகாந்த தாஸ் சுட்டிக்காட்டினார்.
2023 ஆம் ஆண்டில், ஆசிய பசிபிக் பகுதியில் கிரீன்ஃபீல்ட் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான (FDI) மிகவும் கவர்ச்சிகரமான இடமாக இந்தியா தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டது. மொத்த அந்நிய நேரடி முதலீடு 2023-24ல் வலுவாக இருந்தாலும், நிகர FDI மிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வணிகக் கடன்கள் (ECBகள்) மற்றும் குடியுரிமை பெறாதஇந்தியர்களீன் வைப்புத்தொகைகள், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. ECB உடன்படிக்கைகளின் அளவும் இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது என்பது இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமான ஒன்றாக உள்ளது.
மேலும் படிக்க | வருங்கால வைப்பு நிதியில் உங்களுக்கு கிடைக்கும் வருமானம் எவ்வளவு? கணக்கிடுவது சுலபம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ