இலவச மின்சாரம்: உங்களுக்கும் இலவச மின்சாரம் வேண்டுமானால் கண்டிப்பாக இந்த செய்தியை படியுங்கள். ஏனெனில் தமிழக அரசு தரப்பில் இருந்து இனி 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு நீங்கள் ஒரு சிறிய வேலை செய்ய வேண்டும். அதன்படி ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்கத் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது இது தொடர்பான புதிய புகார்கள் வெளியாகி வருகின்றன. உண்மையில், TANGEDCO அலுவலகங்களில் இதற்காக அமைக்கப்பட்டுள்ள கவுன்டர்களில் வாடிக்கையாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக தற்போது புகார்கள் வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில், வாடிக்கையாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்பட்டு வருகின்றனர்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி, ஆன்லைனில் கசிந்தது உங்களின் தகவல்கள்


இதனால் தற்போது முதலில் சென்னையில் அமைக்கப்பட்டிருந்த கவுன்டரை ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டு இருந்தார். மேலும் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க வரும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக் கூடாது என மின்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இதற்கான விரிவான வழிகாட்டுதல்களும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



அரசு வெளியிட்ட புதிய உத்தரவு என்ன?
- மின்வாரிய அலுவலகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆதார் மற்றும் மின் இணைப்பை இணைக்க முறையான இருக்கை வசதிகள் வழங்கப்பட வேண்டும்.


- இடம் குறைவாக இருந்தால், வாடிக்கையாளர்களின் வசதிக்காக சாமியானா பந்தல் வைக்கப்பட வேண்டும்.


- இந்த கவுண்டர்களை கண்காணிக்க TA/CA/CE நிலை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்பட வேண்டும்.


- ஆதார் இணைப்பின் முழு செயல்முறையும் வாடிக்கையாளர்களுக்கு விளக்கப்பட வேண்டும்.


- ஆதார் இணைக்கும் பணியை கண்காணிக்க ஒரு நிர்வாக பொறியாளரையும் அரசு நியமித்துள்ளது.


- வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மற்றும் கவுண்டரில் கணினிகள் இருந்தால் அல்லது அவை மெதுவாக வேலை செய்தால், கூடுதல் கணினிகளை நிறுவ வேண்டும்.


- ஆதார் இணைக்கும் பணியில் எந்த சூழ்நிலையிலும் இடையூறு ஏற்படக் கூடாது என அரசு தெரிவித்துள்ளது.


- ஆதார்-மின் இணைப்பு இலவசமாக இணைக்கப்படும்.


- மின் இணைப்பு கணக்கை ஆதாருடன் இணைக்க அரசு சிறப்பு கவுன்டர்களை நவம்பர் 28 முதல் தொடங்கியுள்ளது.


ஆன்லைனில் மின் இணைப்புடன் ஆதாரை எப்படி இணைப்பது?
ஆதாரை இணைக்க https://nsc.tnebltd.gov.in/adharupload/ என்ற இணையதள பக்கத்திற்கு சென்று உங்களின் மின் இணைப்பு பதிவை உள்ளிட்டு ஆதார் எண்ணை இணைக்கலாம்.


மேலும் படிக்க | உங்கள் பான், ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை கண்டறிவது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ