Free LPG Gas Cylinder: உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அம்மாநில தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளார். இந்த சிறப்பு பண்டிகை கால நிகழ்வில், லோக் பவனில் இருந்து 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ் மாநிலத்தின் தகுதியான 1.75 கோடி குடும்பங்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர் நிரப்புதல் (Cylinder Refill) விநியோக பிரச்சாரத்தை முதல்வர் யோகி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்காக யோகி அரசு ரூ.2,312 கோடி செலவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. உ.பி முதல்வர் மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியையும் வழங்கினார். இப்போது மட்டுமல்லாமல், ஹோலி பண்டிகையையொட்டியும், அதாவது மார்ச் மாதமும் மீண்டும் இலவச காஸ் சிலிண்டர்களை அரசு வழங்கும் என்று முதல்வர் யோகி கூறினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியம்


'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் பயனாளிகள் திட்டத்தின் பலன்களைப் பெற வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைப்பது அவசியம். 2022ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது லோக் கல்யாண் சங்கல்ப் பத்திராவில் வெளியிடப்பட்ட மற்றொரு அறிவிப்பை அரசு நிறைவேற்றி வருவதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 2014க்கு முன், மக்கள் காஸ் சிலிண்டர் இணைப்பு பெறுவது மிக கடினமாக இருந்தது. இணைப்பு கிடைத்தாலும் சிலிண்டருக்காக நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. பல நேரங்களில் போலீசார் தடியடி நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது என அவர் கூறினார். 


50 கோடி மக்கள் பயனடைந்தனர்


ஏழை, எளிய மக்கள் எரிவாயு இணைப்பு பற்றி நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை அப்போது இருந்ததாக உத்தர பிரதேச முதல்வர் கூறினார். புகையினால் பெண்கள் பல நோய்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி 2016-ல் உஜ்வாலா திட்டத்தை தொடங்கியபோது, ​​நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு முடிவுக்கு வந்தது என்று முதல்வர் யோகி கூறினார். முதன்முறையாக நாட்டில் 9 கோடியே 60 லட்சம் குடும்பங்கள் இலவச எரிவாயு இணைப்புகளைப் பெற்றுள்ளன. இதன் மூலம் சுமார் 50 கோடி பேர் பயனடைந்துள்ளனர். எல்பிஜி பயனாளிகளுக்கு ரூ.300 மானியத்தை கூடுதல் பரிசாக பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அளித்த தீபாவளி பரிசு: செய்தி கேட்டு குஷியான நகை வியாபாரிகள்


'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' பயனாளிகளுக்கு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் கிடைத்ததை அடுத்து, டெல்லியில் சிலிண்டர் விலை 603 ரூபாயாக குறைந்துள்ளது. வரும் காலங்களில், மக்களவை தேர்தலுக்கு முன், உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் மானியத்தை அரசாங்கம் மேலும் அதிகரிக்கலாம் என்று ஊடகங்களில் கூறப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகு, எரிவாயு சிலிண்டர்கள் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக நவம்பர் மாதத்தின் முதல் நாளே எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டர்களின் விலையை உயர்த்தின. வணிக எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.101.50 அதிகரித்துது. புதிய கட்டணங்கள் நவம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த விலை உயர்வுக்குப் பிறகு தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1833 ஆக உள்ளது. சென்னையில் வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1999.50 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் இதன் விலை தற்போது ரூ.1833 ஆக உள்ளது. கொல்கத்தாவில் இது ரூ.1943 -க்கு கிடைக்கும். மும்பையில் வணிக எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை ரூ.1785.50 ஆகும். 


மேலும் படிக்க | Indian Railways: ரயில் பயணிகளே... ‘இந்த’ அளவுக்கு அதிமாக சாமான் கொண்டு போனால் கூடுதல் கட்டணம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ