SIM Card Rule: சிம் கார்ட் வாங்க புதிய விதிமுறைகள்! இனி எளிதாக வாங்க முடியாது!
SIM Card Rule: ஜூலை 1 முதல் இந்தியா முழுவதும் சிம் கார்ட் வாங்க புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளது. இது சம்பந்தமாக கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
SIM Card Rule: இந்தியாவில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அதே சமயத்தில் மொபைலின் தேவைகளும் அதிகளவில் உள்ளது. அரசாங்கத்தில் ஒரு திட்டத்தில் பயனடைய கூட மொபைல் எண்கள் தேவை. இப்படி மொபைல் மற்றும் சிம் கார்டுகளின் தேவை அதிகளவில் உள்ளது. இந்நிலையில், சிம் கார்ட் தொடர்பாக புதிய விதிமுறைகள் இந்தியாவில் அறிமுகம் ஆகா உள்ளது. அதன் படி, ஜூலை 1 முதல் நாடு முழுவதும் புதிய விதிகள் அமல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மோசடி மற்றும் ஹேக்கிங் போன்ற விஷமிகளிடம் இருந்து தடுப்பதே இதன் முக்கிய நோக்கம் ஆகும். மார்ச் 15, 2024 அன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் (TRAI) புதிய விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | வாட்ஸஅப் அப்டேட்: ஸ்பேம் அழைப்புகளை ஈஸியாக தடுக்கும் அம்சம் அறிமுகம்
அதன்படி, இந்த புதிய விதிகள் ஜூலை 1, 2024 முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தபட உள்ளது. இதன் மூலம் மோடி மற்றும் ஏமாற்றுபவர்களிடம் இருந்து பயனர்களை காப்பாற்ற முடியும் என்று TRAI கூறியுள்ளார். இருப்பினும், பயனர்கள் இந்த புதிய விதியின் காரணமாக சில சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். TRAIன் இந்த புதிய விதிகளின்படி, சமீபத்தில் சிம் கார்டுகளை போர்ட் செய்த பயனர்கள் தங்கள் மொபைல் எண்ணை மீண்டும் போர்ட் செய்ய முடியாது. சிம் பரிமாற்றம் சிம் ஸ்வாப்பிங் என அழைக்கப்படுகிறது. பொதுவாக சிம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது உடைந்தால் வேறு சிம்மை அதே நம்பரில் மாற்றுவது வழக்கம். வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது சம்பந்தப்பட்ட சிம் கார்ட் அலுவலகத்தில் அதே நம்பரில் நமது புதிய சிம் கார்டை வாங்கி கொள்வோம்.
இந்த வகையில் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக TRAI கூடுகிறது. இந்நிலையில், இந்த வகை மோசடியை தடுக்கும் வகையில் மோசடி செய்பவர்கள் சிம்களை மாற்றுவதையோ அல்லது மொபைல் இணைப்பை மாற்றிய உடனேயே போர்ட் செய்வதையோ தடுக்கும் வகையில் புதிய விதி அமலுக்கு வர உள்ளது. இன்றைய காலகட்டத்தில், சிம் மாற்றும் மோசடி செய்வபர்கள் உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் புகைப்படத்தை வைத்து எளிதாக புதிய சிம்களை வாங்கிவிடுகின்றனர். அதன் பிறகு, மொபைல் தொலைந்துவிட்டதாகக் கூறி, புதிய சிம் கார்டைப் கடைகளில் இருந்து பெறுகிறார்கள். இதற்குப் பிறகு, உங்கள் எண்ணில் பெறப்பட்ட OTP மோசடி செய்பவர்களைச் சென்றடைகிறது.
TRAIன் புதிய அப்டேட்
பயனர்களுக்கு உதவும் வகையில் TRAI புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. அதன்படி, ட்ருகாலர் போன்ற மொபைல் ஆப் வசதி இல்லாமலும் யார் கால் செய்கிறார்கள் என்ற தகவலை பார்க்க முடியும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட உள்ளது. அதன்படி, ஒருவன் நம்பர் மொபைலில் சேமிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், அழைப்பின் போது கால் செய்பவரின் பெயர் காட்டப்படும். இந்த புதிய சேவையைத் தொடங்க தொலைத்தொடர்புத் துறைக்கு TRAI பரிந்துரைத்துள்ளது. இதன் மூலம், மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது தனியுரிமை தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க | போன் தொலைந்து போனாலும் கவலைப்படாதிங்க... இனி ஸ்விட்ச் ஆப் ஆனாலும் கண்டுபிடிக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ