செல்வமகள் சேமிப்பு திட்டம்... 21வது வயதில் உங்கள் மகளின் கையில் ரூ.70 லட்சம் இருக்கும்!
Sukanya Samriddhi Yojana: மத்திய அரசு, பல்வேறு வயதினர், பல்வேறு வகுப்பினர்களுக்கும் ஏற்ற வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ருதி யோஜனா என்னும் செல்வமகள் சேமிப்பு திட்டம்.
Sukanya Samriddhi Yojana: சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் பழக்கம், நம்மில் பலர் கடைபிடிக்கும் வழக்கம் தான். சிலர் குழந்தைகளின் கல்விக்காக, குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ஓய்வு கால நிதிக்காக என பல்வேறு காரணங்களுக்காக, பாதுகாப்பான இடத்தில் சேமித்து வைக்க நம்மில் பலர் விரும்புவோம். பணம் பாதுகாப்பாக இருப்பதோடு, அதனை பன்மடங்காக பெருக்கும் வகையில், நல்ல வட்டி கிடைக்கும் முதலீட்டு திட்டத்தில் சேமிப்பதால், நல்ல வருமானத்தை பெறலாம்.
மத்திய அரசின் சிறுசேமிப்பு திட்டங்கள்
மத்திய அரசு, பல்வேறு வயதினர், பல்வேறு வகுப்பினர்களுக்கும் ஏற்ற வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் சுகன்யா சம்ருதி யோஜனா என்னும் செல்வமகள் சேமிப்பு திட்டம். மகளின் கல்வி, திருமணம் என அனைத்தையும், சிறப்பாக சமாளிக்க உதவும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எட்டு சதவீதத்திற்கும் மேலாக வட்டி கிடைக்கிறது.
8.2% வட்டி கொடுக்கும் செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா, மகள்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் மிகச்சிறந்த திட்டம் ஆகும். ஒவ்வொரு காலாண்டிலும் இதற்கான வட்டி விகிதம் திருத்தப்படும். அந்த வகையில் 2024 ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வட்டி விகிதம் 8.2%. இருப்பினும், இந்தத் திட்டத்திற்கான வட்டியை மாற்றாமல் நிலையாக வைத்திருக்க அரசு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. சுகன்யா சம்ரிதி யோஜனா ஒரு நீண்ட கால திட்டம் ஆகும்.
ரூபாய் 70 லட்சம் சேமிப்பதற்கான வழி
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில், உங்கள் மகளின் ஐந்தாவது வயதில் நீங்கள் கணக்கை தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சம் முதலீடு செய்து வந்தால், உங்கள் மகளின் 21 வது வயதில், அவள் பெயரில் ரூபாய் 69 லட்சத்திற்கும் அதிகமான அளவு பணம் இருக்கும்.
வட்டி மட்டுமே 46 லட்சம் ரூபாய் கிடைக்கும்
சுகன்யா சம்பரிதி யோஜனா திட்டத்தின் கீழ், 15 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்த முதலீடு ரூபாய் 22,50,000 செய்து, 8. 2 சதவீத வட்டி விகிதத்தில் உங்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானம், ரூபாய் 46,77,578. எனவே உங்கள் மகளின் கையில் 21 வயதாகும் போது ரூபாய் 69,27,578 கிடைக்கும்.
குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச முதலீடு
மத்திய அரசு 2015 ஆம் ஆண்டு இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 250, அதிகபட்ச முதலீடு ஒன்று. ஐந்து லட்சம். இந்தத் திட்டத்தில், நீங்கள் குழந்தை 21 முழுமையாக பணத்தை டெபாசிட் செய்ய வேண்டியதில்லை. திட்டம் தொடங்கியதில் இருந்து, 15 ஆண்டுகளுக்கு மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கான வட்டி விகிதம் சிறப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ், ரூபாய் 1.5 லட்சம் வரையிலான வரி விலக்கையும் பெறலாம்.
கணக்கு திறப்பதற்கான விதிகள்
இந்திய குடியுரிமை பெற்ற பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், பெண் குழந்தையின் பெயரில் கணக்கை தொடங்கலாம். குழந்தை பிறந்தது முதல், 10 வயது வரை, குழந்தையின் பெயரை கணக்கை திறக்கலாம். திட்டத்தின் கீழ் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம்.