கேஸ் சிலிண்டர் நிறுவனங்களில் கைரேகை வைக்காவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்து பலரும் அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது வாடிக்கையாளர்களை சிலிண்டர்கள் நிறுவனங்கள் அடையாளம் கண்டுகொள்ளும் நடைமுறையே. அதாவது, வாடிக்கையாளர்கள் (Know Your Customer) பற்றிய அடிப்படை தகவல்களை நிறுவனங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதனால், கேஸ் சிலிண்டர் நிறுவனத்துக்கு உங்கள் தகவல்களை அளிப்பது அவசியம். ஏற்கனவே ஆதார், பான் கார்டுக்கு கொடுத்த தகவல்களைபோலவே கேஸ் சிலிண்டர் புக்கிங்க்கும் உங்களின் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும். இது குறித்து மத்திய அரசு சிலிண்டர் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி சிலிண்டர் நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | IRCTC நேபாள டூர் பேக்கேஜ்: முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்


சிலிண்டர் KYC அப்டேட்


கைரேகை பதிவு செய்யாவிட்டால் சிலிண்டர் கிடைக்காது என்பது வதந்தி என்றாலும், வாடிக்கையாளர்கள் பெறும் மானியம் வேண்டுமானால் நிறுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. அரசின் சிலிண்டர் மானியம் நேரடியாக வங்கி கணக்குக்கு வராமல் போகும். எனவே உங்களின் KYC தகவலை அப்டேட் செய்யுங்கள். இதற்கும் தேவைப்படும் ஆவணங்கள் என்று பார்த்தால் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை (Ration card), வங்கி பாஸ்புக் (Bank passbook) மற்றும் கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யப்பட்ட கேஸ் கனெக்ஷன் புக் (Gas connection book) ஆவணங்களை ஜெராக்ஸ் (Xerox) உடன் உங்களின் கேஸ் புக்கிங் நிறுவனத்துக்கு சென்றால் போதும். இதில் இன்னும் சந்தேகம் இருந்தால் உங்களின் கேஸ் கனெக்ஷன் நிறுவனத்துக்கு அழைத்து தகவலை தெரிந்து கொள்ளுங்கள். 


ஆன்லைனில் KYC தகவலை அப்டேட் செய்ய முடியுமா? என்றால் அது நிச்சயம் முடியும். வீட்டில் இருந்தபடியே ஒருவர் தங்களின் KYC தகவலை அப்டேட் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.


- உங்கள் மொபைலில் Google பிரௌசர் ஓபன் செய்யவும்.
- mylpg.in என்று டைப் செய்யவும்.
- முதலில் வரும் Search Option தேர்வு செய்யவும்.
- இப்போது LPG இணைப்பு பக்கத்திற்கு கொண்டு செல்லப்படுவீர்கள்.
- பக்கத்தின் வலதுபுறத்தில் 3 சிலிண்டர் படம் காண்பிக்கப்படும்.
- அதில் உங்கள் கேஸ் சிலிண்டர் நிறுவனம் எது என்பதை பார்த்து கிளிக் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் மேலே KYC என்ற விருப்பம் காண்பிக்கும்.
- அதை கிளிக் செய்து உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- இப்போது ஆதார் வெரிஃபிகேஷன் என்ற பக்கம் காண்பிக்கப்படும்.
- உங்கள் ஆதார் விபரங்களை உள்ளிட்டு கேப்சா கோடு விபரங்களை டைப் செய்யவும்.
- Generate OTP என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் போனிற்கு வாங்க OTP விபரங்களை உள்ளிட்டால் KYC அப்டேட் செய்யப்படும்.


இணையத்தை பயன்படுத்த தெரிந்தால் வெறும் இரண்டு மூன்று நிமிடங்களில் உங்களின் KYC தகவல்களை அப்டேட் செய்துவிடலாம். கேஸ் சிலிண்டர் முறைகேடுகளை தவிர்க்கவே இந்த நடைமுறைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.


மேலும் படிக்க | இந்தியன் ரயில்வே: உங்கள் Waiting List டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இந்த Code முக்கியம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ