கேஸ் சிலிண்டர் விலை: நீங்களும் மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் வாங்குபவாராக இருந்து, கேஸ் விலை உயர்வால் சிரமப்படுகிறீர்கள் என்றால், இந்தச் செய்தி உங்களுக்கு நிச்சயம் நிம்மதியைத் தரும். ஓஎன்ஜிசி மற்றும் ரிலையன்ஸ் போன்ற பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கேஸ் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தை மறுஆய்வு செய்ய அரசாங்கம் ஒரு குழுவை அமைத்துள்ளது. பெட்ரோலியம் மற்றும் எரிவாயு அமைச்சகம், திட்டக் கமிஷனின் முன்னாள் உறுப்பினர் கிரித் எஸ் பரிக் தலைமையில் இந்த ஆய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கெயில் இந்தியா மற்றும் ஐஓசிஎல் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் அடங்குவர்
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட இந்தக் குழு , எரிவாயு நுகர்வோருக்கு நியாயமான விலையைப் பற்றி ஆலோசனைகளை வழங்கும். நகர கேஸ் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், பொது எரிவாயு நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் உர அமைச்சகம் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு பிரதிநிதி அரசு அமைத்த குழுவில் இடம் பெற்றுள்ளார். 2014 ஆம் ஆண்டில், அரசாங்கம் எரிவாயு உபரி நாடுகளின் கேஸ் விலையைப் பயன்படுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்வதற்கான சூத்திரத்தைக் கண்டறிந்தது.


மேலும் படிக்க | September 1 முதல் பல முக்கிய மாற்றங்கள்: உங்களுக்கு ஆதாயமா, நஷ்டமா? 


உக்ரைன் போருக்குப் பிறகு விலைகள் கடுமையாக உயர்ந்தன
இந்த சூத்திரத்தின்படி, கேஸ் விலைகள் மார்ச் 2022 வரை உற்பத்தி செலவை விட பல மடங்கு குறைவாக இருந்தது. ஆனால் உக்ரைன் போர் தொடங்கிய சில மாதங்களில் இந்த விகிதம் வேகமாக அதிகரித்துள்ளது. பழைய எரிவாயு வயல்களில் இருந்து எரிவாயுவின் விலை ஏப்ரல் முதல் யூனிட்டுக்கு $6.1 ஆக (MMBTU) இரட்டிப்பாகியுள்ளது மற்றும் அடுத்த மாதத்திற்குள் ஒரு யூனிட்டுக்கு $9 ஐ தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நுகர்வோருக்கு வழங்கப்படும் எரிவாயுக்கான நியாயமான விலையை பரிந்துரைக்குமாறு இந்தக் குழுவைக் கேட்டுள்ளது. உரங்கள் தயாரிப்பது மட்டுமின்றி, இந்த எரிவாயு மின் உற்பத்திக்கும், சிஎன்ஜி மற்றும் எல்பிஜியாகவும் பயன்படுத்தப்படுகிறது.


இந்த மாதத்திறக்கான எல்பிஜி சிலிண்டர் விலை விவரம்
சர்வதேச விலை குறைப்புக்கு ஏற்ப எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களால் வணிக ரீதியிலான எல்பிஜி சிலிண்டரின் (19-கிலோ) விலை ரூ.91.50 குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய விலை குறைப்புக்கு பிறகு டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறையும். இது பொது மக்களிடையே பெரிய நிவாரணத்தை கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு - ஏதேனும் ஒரு டிகிரி அவசியம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ