வங்கிகளில் இப்போது கடன் வாங்குவதற்கு கிரெடிட் ஸ்கோர் அவசியம். ஒருவரின் கடன் வரலாறு மற்றும் திருப்பி அடைத்ததற்கான விஷயங்களை கிரெடிட் ஸ்கோர் தெளிவாக காட்டிவிடும். குறிப்பிட்ட தவணைகள் செலுத்தாதது, கடன் நிலுவை உள்ளிட்ட விவரங்கள் ஆகியவற்றை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதை வைத்தே வங்கிகள் ஒருவருக்கு கடன் கொடுக்கலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்கின்றனர். இது ஒன்று கட்டாயம் என்பதும் இல்லை. கிரெடிட் ஸ்கோர் குறைவாக இருந்தாலும், வங்கி மேலாளரின் பரிந்துரையின் அடிப்படையில் கூட கடன் கொடுக்கலாம். ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமில்லை என்பதால், கிரெடிட் ஸ்கோர் முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்றால் வங்கிகள் முதலில் அவரின் வருவாய், கடன் நிலுவை, ஏற்கனவே வாங்கிய கடன் திரும்பிச் செலுத்திய விதம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆராய்வார்கள். மேலும், இப்போது அவர் எதற்காக கடன் வாங்குகிறார், அதனை எப்படியெல்லாம் திருப்பி அடைப்பார்? இதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதையெல்லாம் விசாரித்தபிறகே கடன் ஒப்புதலை கொடுப்பார்கள். இதில் கிரெடிட் ஸ்கோர் என்பதை ஆன்லைன் வழியாக மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.


மேலும் படிக்க | ஆதார்-பான் எண் இணைக்கப்பட்டுவிட்டதா? SMS மூலம் சரிபார்ப்பது எப்படி?


முன்பெல்லாம் இந்த புள்ளிகளை தெரிந்து கொள்ள கட்டணம் வசூலிக்கப்பட்டது. பிறகு வங்கிகளே இந்த சேவையை வழங்க தொடங்கின. காலம் மாறமாற டெக்னாலஜியின் வளர்ச்சிக்குப் ஏற்ப கிரெடிட் ஸ்கோர் தெரிந்து கொள்ளும் முறையும் புதிய மற்றும் எளிமையான வடிவத்தை பெற்றுவிட்டன. அதன்படி, இப்போது கிரெடிட் ஸ்கோரை வாட்ஸ்அப் வழியாகவே தெரிந்து கொள்ளலாம். அதற்கான மொபைல் எண் மற்றும் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.



வாட்ஸ்அப் வழியாக கிரெடிட் ஸ்கோர் தெரிந்து கொள்ளும் வழிமுறை:


* உங்கள் வாட்ஸ்அப் மொபைல் எண்ணில் இருந்து +91-9920035444 என்ற எண்ணுக்கு 'Hey' என்ற மெசேஜை அனுப்புங்கள்
* அதன்பிறகு உங்கள் செல்போன் எண்ணில் இருந்து உங்கள் பெயர், இமெயில் ஐடி, மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்
* உடனடியாக உங்களின் கிரெடிட் ஸ்கோர் வாட்ஸ்அப்புக்கு வந்துவிடும்.
* வங்கியில் கொடுக்கப்பட்டிருக்கும் இமெயிலுக்கும் உங்கள் கிரெடிட் ஸ்கோர் செல்லும்


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் கிரெடிட் ஸ்கோர் வாட்ஸ்அப் வழியாக தெரிந்து கொள்வதற்கு ஒரு பைசா கூட நீங்கள் செலவழிக்க தேவையில்லை. 


மேலும் படிக்க | Pan - Aadhar Link: மார்ச் கடைசிக்குள் செய்ய வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ