Gionee இந்தியாவில் அறிமுகப்படுத்தும் ஜியோனி மேக்ஸ் (Gionee Max), மிகச்சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்ஃபோன் ஆகும்.  லேட்டஸ்ட் வெர்ஷன் ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது.  இதன் விலை ₹5,999 தான். இதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மொபைல் ஃபோனின் திரை 6.1 அங்குலம். இது HD + தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது. டிஸ்ப்ளே 2.5D கர்வ்ட் க்ளாஸ்  கொண்டது என நிறுவனம் கூறுகிறது. ஃப்ரண்ட் கேமரா டிஸ்ப்ளேக்கு மேலே ஒரு ‘ட்யூ ட்ராப்பாக’ வைக்கப்பட்டுள்ளது.


ஜியோனி மேக்ஸ் என்ற புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஜியோனி மேக்ஸ் ட்யூயல் லென்ஸ் கேமரா, 5000 mAh பேட்டரி மற்றும் 6.1 இன்ச் ஸ்கிரீனுடன் வருகிறது. இதனை ஆகஸ்ட் 31ம் தேதி முதல் பிளிப்கார்ட் மூலமாக வாங்கலாம். Flipkart- தனது இ-காமர்ஸ் இணையதளத்தில்  ஏற்கனவே இதற்கான ஒரு பிரத்யேக பக்கத்தை அமைத்துள்ளது.


ஜியோனி மேக்ஸ் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்ஃப்போன் ஆகும். இதன் விலை,  ₹5,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறப்பு அறிமுக விலை என்றும், இதன் முதல் விற்பனை ஆகஸ்ட் 31 அன்று மதியம் 12 மணிக்கு தொடங்கும். நீலம், கருப்பு மற்றும் சிவப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும்.


ஸ்மார்ட்ஃபோன் 6.1 அங்குல திரையுடன், HD + ரெசல்யூஷனை கொண்டுள்ளது. 


1.6GHz வரை அதிர்வெண் கொண்ட ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இந்த தொலைபேசி இயக்கப்படுகிறது. ஜியோனி மேக்ஸ் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் மெமரி கொண்டதாகும். இதில் மெமரி கார்டைப் பயன்படுத்தி 256 ஜிபி வரை மெமரியை அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க | மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச்சலுகைகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்...!!!


இதில் ட்யூயல் கேமரா அதாவது, இரட்டை கேமரா அமைப்பைப் பெறுகிறது. பிரைமரி லென்ஸ் 13MP சென்சாருடன், பொக்கே லென்ஸ் (bokeh lens) உள்ளது. ப்ரண்ட் கேமரா 5 MP லென்ஸ் கொண்டது. இதில் உள்ள கேமரா ஸ்லோ மோஷன், ஆடியோ நோட், டைம் லேப்ஸ், ஃபேஸ் பியூட்டி மற்றும் பொக்கே மோட் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது.


5000 mAh பேட்டரி நீண்ட நேரத்திற்கான பேட்டரி திறனை கொண்டுள்ளது.