ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, இப்போது இந்தியாவுக்கு மற்றொரு ஜாக்பாட் கிடைத்துள்ளது. ஒடிசாவின் 3 மாவட்டங்களில் தங்கம் இருப்பதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்திய புவியியல் ஆய்வு மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தியோகர், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய இடங்களில் தங்கப் படிவுகள் இருப்பதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் ஒடிசாவின் புவியியல் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த 3 மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருப்பதும் தெரிவந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | லித்தியம் சுரங்கம்: ஜம்மு காஷ்மீரை சூழப்போகும் ராணுவ மற்றும் சூழலியல் பேராபத்துகள்


ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் தங்க படிமங்கள் குறித்த ஆய்வுகள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றன. 1970 மற்றும் 80களிலேயே கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தங்கம் இருப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது குறித்து அம்மாநில எம்எல்ஏ சுதிர்குமார் சமல்  சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அம்மாநில சுங்கத்துறை அமைச்சர் பிரபுல்ல குமார் மாலிக், ஒடிசாவில் 3 மாவட்டங்களில் தங்க புதையல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கூறினார். அங்கு தங்கம் இருப்பதாகவும், ஆனால் அவற்றின் அளவு என்ன என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை என கூறியுள்ளார். 


ஒடிசா மாநில அமைச்சரின் இந்த பதில் மூலம் இந்தியாவில் தங்க புதையல் இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் லித்தியம் புதையல் இருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இப்போது தங்கம் சுரங்கம் குறித்த தகவல் இரட்டிப்பு மகிழ்ச்சியை மத்திய அரசுக்கு கொடுத்துள்ளது. காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் லித்தியத்தின் அளவு சுமார் 5.9 மில்லியன் டன் கொள்ளளவு ஆகும். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்த லித்தியம் அளவின் அடிப்படையில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது.


பொலிவியா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு முன் உள்ளன. எனினும் லித்தியம் சுத்திகரிப்பில் உலகிலேயே சீனா முன்னணியில் இருக்கிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 60 விழுக்காடு கட்டமைப்புகள் அந்த நாட்டிடம் மட்டுமே இருக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை லித்தியம் சுத்திகரிப்புகான கட்டமைப்புகள் இப்போது இல்லை. சீனாவுக்கு நிகரான லித்தியம் சுத்திகரிப்பு கட்டமைப்புகள் மேற்கொள்ள இந்தியாவுக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | லித்தியம்: அசுர பலத்தோடு இருக்கும் சீனா...! இந்தியா இன்னும் சிந்திக்கனும்


மேலும் படிக்க | இந்தியாவின் ’லித்தியம் புதையல்’ பேட்டரி துறையில் சீனாவை பின்னுக்கு தள்ளும்..! எப்படி?


மேலும் படிக்க | லித்தியம் அதிகம் இருக்கும் டாப் 5 நாடுகள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ