ஈசியாக பெறக்கூடிய கடன்களில் தங்கக் கடன் முதன்மையானது. தங்கத்தை ஒரு முதலீடாக மட்டுமல்லாமல் அவசரத்துக்கு தேவையான பணத்தை பெற்றுத்தரக்கூடிய பொருளாகவும் இந்தியர்கள் பார்க்கின்றனர். தங்கத்திற்கென தனி மதிப்பு இருப்பதால் ஈசியாக வாங்கிவிடலாம். முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் மக்கள் வேலைவாய்ப்பு, தொழில் இழப்பு என வாழ்வாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமுடக்கம் தளர்த்தப்படும் சூழலில் அவசர தேவைக்காக பணம் தேவைப்படலாம். ஆனால் வங்கியில் கடன் (Bank Loan) பெற செக்யூரிட்டி ஆவணங்கள் பெரும் கெடுபிடியாக இருக்கிறது. இதுபோன்ற சூழலில் தங்கக் கடன் மட்டுமே சிறந்தது ஆகும். 


ALSO READ | SBI மூலம் நிமிடங்களில் 50 லட்சம் வரை தங்கக் கடன் பெறலாம்: இதை செய்தால் போதும்


இப்போது குறைந்த வட்டிக்கு தங்கக் கடன் வழங்கும் வங்கிகளின் பட்டியலை பார்க்கலாம்
பாங்க்பஜார் தொகுத்த தரவுகளின்படி, வங்கிகள் 7% வரை குறைந்த வட்டி விகிதங்களுடன் கோல்டு லோன் (Gold Loan) வழங்குகின்றன. தற்போது, பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்ற வங்கிகளிடையே மிகக் குறைந்த வட்டி விகிதத்தை 7% ஆக வழங்குகின்றன. இதற்கிடையில், பாங்க் ஆஃப் இந்திய வங்கி 7.35% வட்டி விகிதத்தில் தங்கக் கடன்களை வழங்கி வருகிறது. இந்த விகிதங்கள் மூன்று ஆண்டு கால அவகாசத்துடன் 5 லட்சம் கடனுக்கானவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


இன்றைய தங்கம் விலை என்ன?
கடந்த ஆண்டு ஏற்பட்ட தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, அதன் விலை கணிசமாக உயர்ந்து வந்தது. எனினும் கடந்த சில தினங்களாக தங்கம் விலை ஏறுமுகமாகவே உள்ளது. தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4577-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.36616 -க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.39488-க்கு விற்பனையாகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR