இந்தியாவில், குறிப்பாக தென்னிந்தியாவில்  தங்கம் என்பது ஒவ்வொவொரு குடும்பத்திலும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது என்றால் மிகையில்லை. ஏனென்றால், தங்கம் வைத்திருப்பது மிகவும் மதிப்பும் கவுரமும் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அதோடு, சேமிக்கும் நோக்கிலும் தங்கம் வாங்குபவர்கள் அதிகம் உள்ளனர். தனி நபர் மட்டுமல்லாது,  ஒவ்வொரு நாடும் முடிந்தவரை தங்கத்தை அதிக அளவில் வைத்திருக்க விரும்புகிறது. கடினமான காலங்களில் தங்க ஆபரணங்களை வைத்திருந்தால் அது பெரிதும் கை கொடுக்கும் என்பதையும்  மறுக்க இயலாது. இந்நிலையில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2023 ஆம் ஆண்டில், தங்கம் சுமார் 15% என்ற அளவில் நல்ல வருமானத்தை அளித்துள்ளது. 2024 ஆம் ஆண்டிலும் தங்கத்தில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் அதன் மிக அதிக அளவில் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் திட்டத்தை இன்னும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. பணவீக்கத்தில் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய வங்கி 2024 ஆம் ஆண்டில் வட்டி விகிதங்களை மூன்று முறை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2024 முதல் சாத்தியமான வட்டி விகிதக் குறைப்புக்கு சந்தைகளில் ஏற்படும் தாக்கும் காரணமாக சில மாற்றங்கள் ஏற்படலாம் என்கின்றனர் நிபுணர்கள். இந்த மாற்றம் டாலர் குறியீட்டில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இது அமெரிக்க பத்திர வருவாயில் மேலும் சரிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


தங்கம் விலை உயருவதற்கான காரணம்


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கூற்றுப்படி, முக்கிய மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாக உலகப் பொருளாதார வளர்ச்சி 2022 முதல் குறைந்து வருகிறது. இந்தச் சூழல் தங்கத்தின் மீதான முதலீடு நம்பகமான முதலீடாக இருந்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டங்கள் ஏதேனும் அதிகரித்தால், தங்கம் பாதுகாப்பான முதலீடாக மேலும் வலுவடையும். மத்திய வங்கிகள் கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து தங்கத்தை வாங்கி வருவதால், சமீப காலமாக பெரும் கையிருப்பு குவிந்து வருகிறது. வரவிருக்கும் நேரத்திலும், மத்திய வங்கிகளிடமிருந்து நல்ல டிமாண்ட் காணப்படலாம், ஏனெனில் தங்கம் வைத்திருப்பது, டாலரை அதிகமாக சார்ந்து இருப்பதைக் குறைக்கின்றன.


மேலும் படிக்க | இனி வங்கிகள் கண்டபடி அபராத கட்டணம் விதிக்க முடியாது... RBI-யின் புதிய விதிகள்!


2024ல் தங்கம் விலை உயர்வு


தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இடையிடையே குறையும் வாய்ப்பும் உள்ளது. தங்கத்திற்கான முக்கிய ஆதரவு விலை நிலைகள், 10 கிராமுக்கு ₹59,500 மற்றும் ₹58,700 என மதிப்பிடப்படுகிறது. விலை சரிவு வாங்குபவர்களை அதிகம் ஈர்க்கலாம். இதன் காரணமாக, 2024 ஆம் ஆண்டில் 10 கிராமுக்கு ₹ 72,000 என்ற புதிய சாதனை அளவை அடையலாம் என்கின்றனர் நிபுணர்கள்.


2024ல் வெள்ளி விலை நிலவரம்


வலுவான தொழில்துறை தேவை காரணமாக முதலீட்டாளர்கள் வெள்ளியை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். உலகளவில், 2023 ஆம் ஆண்டில், வெள்ளி ஒரு அவுன்ஸ் $20 முதல் $26 வரை வர்த்தகம் செய்யப்படுகிறது. அவுன்ஸ் ஒன்றுக்கு $26 அல்லது ஒரு கிலோவுக்கு ₹78,500க்கு மேல் சென்ற பிறகு, வெள்ளி ஒரு அவுன்ஸ் ஒன்றுக்கு $30 அல்லது ஒரு கிலோவுக்கு ₹85,000-88,000 நோக்கி வலுவான வேகத்தைக் காணும். வெள்ளியின் ஆதரவு அளவு ஒரு கிலோவுக்கு ரூ.70,000. இதற்கு கீழே ஒரு கிலோ ஆதரவு ரூ.66,500.


மேலும் படிக்க | Budget 2024: தேர்தலுக்கு முன் இவர்களுக்கு குட் நியூஸ் கொடுக்க தயாராகிறதா அரசு? பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ