சென்னை: இன்று (வெள்ளிக்கிழமை) தந்தேராஸ் (Dhanteras 2020) மற்றும் தீபாவளி (Diwali 2020) பண்டிகை நாளில் தங்கத்திற்கான தேவை காரணமாக, அதன் விலை கடுமையாக உயர்ந்தது. பண்டிகை காலத்தில் தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால், டெல்லி சந்தையில் வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை (Gold rate on 13th November 2020) ரூ .241 அதிகரித்து 10 கிராமுக்கு ரூ .50,425 ஆக உள்ளது. HDFC செக்யூரிட்டீஸ் இது குறித்த தகவல்களை வழங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்ந்தது. முன்னதாக வியாழக்கிழமை, தங்கம் 10 கிராமுக்கு ரூ .50,184 ஆக இருந்தது. டெல்லி சந்தையில் தங்கத்தைத் தவிர, வெள்ளி விலையும் உயர்ந்தது (Silver price 13th November 2020) வெள்ளியின் ஒரு கிலோவுக்கு ரூ .161 அதிகரித்து ரூ .62,542 ஆக உயர்ந்தது. 


ALSO READ |  தங்கத்தில் முதலீடு செய்கிறீர்களா? அப்போ இந்த செய்தியை கண்டிப்பாக படிக்கவும்


உலக சந்தைகளில் தங்க விலை: 


தீபாவளிக்கு முன் தந்தேராஸ் நாளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவது நல்லது என கருதப்படுகிறது. அதன் தாக்கம் உலக சந்தையில் (Global Market Gold rate) எதிரொலித்தது. தங்கம் அவுன்ஸ் 1,880 டாலராக கடுமையாக உயர்ந்தது. அதேநேரத்தில் உலக சந்தையில் வெள்ளி ஒரு அவுன்ஸ் 24.32 டாலராக மாறாமல் இருந்தது.


அமெரிக்காவின் பல மாநிலங்களில் கொரோனோ வைரஸ் தொற்று இருமடங்காக அதிகரித்துள்ளதால் நிறைய அச்சங்கள் உள்ளன, இதன் காரணமாக விலைமதிப்பற்ற பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. அதாவது தங்கத்தின் மீது அதிக அளவில் முதலீடு செய்யப்படுகிறது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR