Gold Rate Today:₹11,000 குறைந்துள்ள தங்கம் விலை.. மேலும் குறையுமா..!!
இந்த வாரத்தில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 10 கிராம் தங்கத்தின் விலை இன்னும் ரூ .45,000க்கும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், வெள்ளியின் விலை சிறிது அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலைகள், கடந்த 10 வர்த்தக அமர்வுகளில், தங்கம் 10 கிராமுக்கு ரூ .45,000 வர்த்தகம் செய்யப்படுகிறது. திங்களன்று, தங்கம் லேசான ஏற்ற இறக்கங்களுடன் ரூ .150 உயர்ந்துள்ளது. இந்த மாதம் இதுவரை தங்கம் சுமார் 1150 ரூபாய் வரை குறைந்துள்ளது. இந்த 15 நாட்களில் வெள்ளி விலை 1900 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், தங்கம் (Gold Rate) 10 கிராமுக்கு ரூ .50,000த்தை விட அதிகமாக இருந்தது, இன்று எம்சிஎக்ஸில் (MCX) ஏப்ரல் மாத தங்கம் ரூ.44900 ஆக உள்ளது, அதாவது தங்கம் இரண்டரை மாதங்களில் 10 கிராமுக்கு ரூ .5100 வரை குறைவாக உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தங்கம் விலை ரூ .45,500 ஆக இருந்தது, ஆனால் அதே வாரத்தில் 45,000 என்ற அளவை விட குறைந்து, அதன் பின்னர் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டது.
எம்.சி.எக்ஸ் (MCX) தங்கம்: எம்.சி.எக்ஸில் தங்கம் 10 கிராமுக்கு ரூ .45,000 என்ற அளவில் தொடங்கியது, தங்கம் விலை 45,000 க்கு மேல் சென்றாலும், உடனடியாக குறைந்து, அதே நிலைக்கு வந்து விட்டது
ALSO READ | 2000 ரூபாய் நோட்டு இன்னும் அச்சிடப்படுகிறதா.. மத்திய அரசு கூறியது என்ன..!!!
கடந்த வாரத்தில் தங்கம் விலை
திங்கள் - ₹44,218/10 கிராம்
செவ்வாய் ₹44,857/10 கிராம்
புதன்கிழமை ₹44,792/10 கிராம்
வியாழக்கிழமை ₹44,879/10 கிராம்
வெள்ளிக்கிழமை ₹44,750/10 கிராம்
தங்கம் விலை ரூ .11,300 வரை குறைந்துள்ளது
கடந்த ஆண்டு, கொரோனா (Corona Virus) நெருக்கடி காரணமாக, மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்திருந்தனர், ஆகஸ்ட் 2020 இல்,10 கிராம் தங்கத்தின் விலை மிக உயர்ந்த அளவாக ₹ 56,191 என்ற அளவை எட்டியது. அதனுடன் ஒப்பிடுகையில், தங்கம் 25 சதவீதம் வரை குறைந்துள்ளது, தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ₹44900 என்ற அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது. அதாவது சுமார் 11,300 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளி விலை: கடந்த இரண்டு வார விலையை ஒப்பிடும்போது வெள்ளி விலை இப்போது சிறிது அதிகரித்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு, வெள்ளிக்கிழமை, வெள்ளி ஒரு கிலோ ₹64370 என்ற அளவை கடந்து இன்று விலை ₹ 67500 என்ற அளவை தாண்டியுள்ளது
கொரோனா காலத்தில் உச்சத்தை தொட்ட வெள்ளி விலை ₹12,230 குறைந்துள்ளது
வெள்ளியின் மிக உயர்ந்த அளவாக கிலோவுக்கு ரூ ₹79,980 என்ற அளவை எட்டியது. அதை விட 12,200 ரூபாய் குறைந்துள்ளது. இன்று, வெள்ளி வெள்ளி ஒரு கிலோ ரூ .67500 க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது
ALSO READ | புதிய ஊதிய விதிகள் உங்கள் சம்பளத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR