Gold Silver Rate March 24, 2021: தங்கத்தின் விலை தேசிய அளவில் 1 கிராமுக்கு, முந்தைய அளவான ரூ. 4380-லிருந்து ரூ .80 குறைந்து ரூ.4300 ஆக உள்ளது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை 800 ரூபாய் குறைந்து ரூ .43,000 ஆக உள்ளது. இது முந்தைய நாளில் 43,800 ரூபாயாக இருந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

24 காரட் 10 கிராம் தங்கத்தின் விலையும் 800 ரூபாய் குறைந்து ரூ .44,000 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 44,800 ரூபாயில் முடிவடைந்தது. 


வெள்ளியின் விலையும் தங்கத்தின் விலை போலவே புதனன்று குறைந்துள்ளது. 


பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் (Gold) விலை மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்: 


டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ .44,050 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,050 ஆக உள்ளது.


சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,280 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,120 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.  


கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 44,400 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 


மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் விலை 43,000 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 44,000 ரூபாயாகவும் உள்ளது. 


ALSO READ: Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?


சர்வதேச சந்தையின் தங்கத்தின் விலை


சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் புதன்கிழமை அவுன்ஸ் ஒன்றுக்கு 0.25 சதவீதம் குறைந்து 1,731.80 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 2.96 சதவீதம் குறைந்துள்ளது. இது 52.80 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.


வெள்ளி விலை நிலவரம்


தங்கத்தின் விலை (Gold Price) போலவே வெள்ளியின் விலையிலும் வீழ்ச்சி காணப்பட்டது. 10 கிராம் வெள்ளி முந்தைய விலையான 666 ரூபாயிலிருந்து 6 ரூபாய் குறைந்து 660 ரூபாயாக உள்ளது. 


மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு: 


நாட்டின் பல்வேறு நகரங்களில், தங்கத்தின் விலை போலவே வெள்ளி (Silver) விலையும் மாறுபட்டிருக்கும். டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் விலை 66,000 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 70,400 ரூபாயாக உள்ளது.


ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR