Gold / Silver Rates Today: பெரிய நகரங்களில் குறைந்தது தங்கத்தின் விலை, வெள்ளி விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.20 சதவீதம் குறைந்து 1,723.20 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 4.61 சதவீதம் குறைந்துள்ளது, இது 83.30 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
Gold / Silver Rate March 26, 2021: வியாழனன்று ஏற்பட்ட அதிகரிப்புக்குப் பிறகு, வெள்ளியன்று தேசிய அளவில், தங்கத்தின் விலை சற்று குறைந்து துவங்கியது. முந்தைய அமர்வில் 4,402 ரூபாயாக இருந்த 22 காரட் தங்கத்தின் விலை இன்று 10 ரூபாய் குறைந்து 4,392 ஆனது. 22 காரட்-தங்கத்தின் 10 கிராம் விலை ரூ .43,920 ஆக உள்ளது. இது முந்தைய நாளின் விலையான ரூ .44,020- லிருந்து 100 ரூபாய் குறைந்துள்ளது. 22 காரட் தங்கத்தின் விலையைப் போலவே, 24 காரட் தங்கத்தின் விலையும் ரூ .100 குறைந்து 10 கிராமுக்கு ரூ .44,920 ஆக உள்ளது. முந்தைய அமர்வில் இது 45,020 ரூபாயில் முடிவடைந்தது. தங்கத்தின் விலைக்கும் மாறாக வெள்ளியன்று வெள்ளி விலை அதிகரித்துள்ளது.
பல்வேறு நகரங்களில் அந்தந்த பகுதிகளுக்கான வரி வகைகளைப் பொறுத்து தங்கத்தின் விலை (Gold Rate) மாறுபடுகிறது. நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களை இங்கே காணலாம்:
டெல்லி: தேசிய தலைநகரில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .44,150 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .48,160 ஆக உள்ளது.
சென்னை: சென்னையில் 22 காரட் 10 கிராம் தங்கம் 42,350 ரூபாய்க்கும் 24 காரட் தங்கம் 46,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தா: கொல்கத்தாவில் 10 கிராம் 22 காரட் தங்கம் 44,340 ரூபாய்க்கும் 24 காரட்டுக்கு 10 கிராம் தங்கம் 47,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மும்பை: மும்பையில் 10 கிராமுக்கு 22 காரட் தங்கத்தின் (Gold) விலை 43,920 ரூபாயாகவும் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 44,920 ரூபாயாகவும் உள்ளது.
ALSO READ: Gold Rates Today: அதிகரிக்கத் துவங்குகிறது தங்க விலை: இன்றைய தங்க விலை நிலவரம் இதோ
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை:
சர்வதேச சந்தையில், தங்கத்தின் வீதம் திங்களன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.20 சதவீதம் குறைந்து 1,723.20 அமெரிக்க டாலராக உள்ளது. கடந்த 30 நாட்களில் அதன் செயல்திறன் 4.61 சதவீதம் குறைந்துள்ளது, இது 83.30 அமெரிக்க டாலருக்கு சமமாகும்.
வெள்ளி விலை நிலவரம்:
இன்று வெள்ளி விலை லேசான அதிகரிப்பைக் கண்டது. 10 கிராம் வெள்ளியின் விலை 4 ரூபாய் அதிகரித்தது. நேற்று 653 ரூபாயக இருந்த வெள்ளியின் விலை 657 ஆனது.
மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலைகள் பின்வருமாறு:
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் ஒரு கிலோ வெள்ளியின் (Silver) விலை 65,700 ரூபாயாக உள்ளது. சென்னை மற்றும் ஹைதராபாத்தில் அதே அளவிலான வெள்ளியின் விலை 69,400 ரூபாயாக உள்ளது.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR