Gold rates today: தங்கம் வாங்குவதில் ஆர்வம் காட்டும் மக்கள், தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ
இந்த வாரம் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .50,000 க்கும் குறைவாகவே இருந்தது. பிப்ரவரி 1 முதல், தங்கத்தின் விலை 8.2% சரிந்துள்ளது. தங்கம் விலை குறைந்ததால், வியாபாரம் புத்துயிர் பெற்றது.
Gold Price Today, March 5, 2021: தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஓரளவு சரிவைக் கண்டது. இன்றைய வர்த்தக துவக்கத்தில், 22 காரட் தங்கத்தின் ஒரு கிராம் விலை முந்தைய விலையான ரூ .4,437-லிருந்து ரூ .47 குறைந்து ரூ .4,390 ஆக இருந்தது. டெல்லியில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 44,250 ரூபாயிலிருந்து 43,950 ரூபாயாகக் குறைந்தது. மும்பையில் இன்று தங்கம் 43,900 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது.
சென்னை: சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .42,170 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை ரூ .46,020 ஆக உள்ளது.
முன்னதாக வியாழக்கிழமை, தங்கம், ஒரு சிறிய வீழ்ச்சியைக் கண்டது. அதைத் தொடர்ந்து 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை (Gold Price) ரூ .45,370 ஆக இருந்தது. முந்தைய விலையான ரூ .45,420 ஐ விட ரூ .50 குறைந்துள்ளது. MCX-ல், தங்க ஃபூச்சர்ஸ் 10 கிராமுக்கு 0.4 சதவீதம் குறைந்து ரூ .44,768 ஆக உள்ளது. தேசிய போக்கைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விகிதம் மாறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை ஒரு வாரத்தில் ரூ .1,800 குறைந்துள்ளது
இந்த வாரம் தங்கத்தின் (Gold) விலை 10 கிராமுக்கு ரூ .50,000 க்கும் குறைவாகவே இருந்தது. பிப்ரவரி 1 முதல், தங்கத்தின் விலை 8.2% சரிந்துள்ளது. தங்கம் விலை குறைந்ததால், வியாபாரம் புத்துயிர் பெற்றது. இதனால் தங்க நகைக்கடைக்காரர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அகமதாபாத் ஜுவல்லர்ஸ் அசோசியேஷனின் (ஜேஏஏ) தலைவர் ஜிகர் சோனி, நகைகள் உற்பத்தி செய்வதற்கும், புல்லியன் தங்கத்திற்கும் தினமும் 50-60 கிலோ தங்கம் தேவைப்படுகிறது என்று கூறினார்.
ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, தங்கம் மற்றும் வெள்ளி மீதான வரி குறைப்புக்குப் பிறகு இந்த தங்கத்திற்கான தேவை நன்றாக அதிகரித்துள்ளது. விலை குறந்துள்ளதை பயன்படுத்திக்கொண்டு மக்கள் அதிக அளவில் தற்போது தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.
மேலும், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவதால், விற்பனை வரவிருக்கும் நாட்களில் மேம்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
வெள்ளி விலை
முந்தைய நாளின் விலையுடன் ஒப்பிடும்போது, வெள்ளி (Silver) விலை 679 ரூபாயிலிருந்து 17 ரூபாய் குறைந்து 10 கிராமுக்கு ரூ .662 ஆக இருந்தது.மெட்ரோ நகரங்களில் வெள்ளி விலை
டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தாவில் வெள்ளி ஆபரணங்கள் வாங்க ரூ .66,200 செலுத்த வேண்டியிருக்கும். இந்த நகரங்களில் ஒரு கிலோ வெள்ளியின் வீதம் ஒரே மாதிரியாக இருக்கும். அதேசமயம், சென்னை மற்றும் ஹைதராபாத்தில், ஒரி கிலோ வெள்ளிக்கு ரூ .70,400 செலுத்த வேண்டியிருக்கும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR