புதுடெல்லி: தங்கமும் வெள்ளியும் தொடர்ந்து கீழ்நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. வழக்கமான விற்பனை காலம் துவங்குவதற்கு முன்பு, தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. சர்வதேச சந்தைகளில் பலவீனத்தின் போக்கு காரணமாக, டெல்லி புல்லியன் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி இரண்டின் விலையிலும் வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டது. முதலீட்டாளர்களின் கூற்றுப்படி, தங்கம் வாங்க இதுவே சிறந்த நேரமாகும். ஏனென்றால், திருமண சீசன் தொடங்கியவுடன் தங்கம் மற்றும் வெள்ளி விலை பொதுவாக அதிகரிக்கத் தொடங்கிவிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தங்கத்தின் விலை மேலும் குறைந்தது


வாரத்தின் கடைசி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை தங்கம் பத்து கிராமுக்கு ரூ .43,887 ஆக முடிந்தது. HDFC செக்யூரிட்டீசின் படி, கடந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளில், அதாவது பிப்ரவரி 26 அன்று, தங்கம் 10 கிராமுக்கு ரூ .44,409 என்ற நிலையில் முடிந்தது. அதன் பிறகு, சென்ற வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை மொத்தம் 522 ரூபாய் குறைந்தது. கடந்த சில நாட்களாக, தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.


தங்கம் தனது அதிகபட்ச விலையிலிருந்து ரூ .12,000 க்கும் அதிகமாக குறைந்துள்ளது


கடந்த ஆண்டு, கொரோனா நெருக்கடி சமயத்தின் போது மக்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்திருந்தனர். ஆகஸ்ட் 2020 இல், MCX-ல் 10 கிராம் தங்கத்தின் விலை (Gold Price) மிக உயர்ந்து 56191 ரூபாயை எட்டியது. கடந்த ஆண்டு தங்கம் 43 சதவீத வருமானத்தை அளித்தது. அதிகபட்ச விலையை ஒப்பிடும்போது, ​​தங்கம் 25 சதவீதம் வரை குறைந்துவிட்டது. தரவுகளின்படி, ஆகஸ்ட் 2020 உடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .12,300 குறைந்துள்ளது.


வெள்ளி விலையும் குறைந்தது


தங்கத்துடன், வெள்ளியும் (Silver) தொடர்ந்து அதன் பொலிவை இழந்து வருகிறது. வெள்ளிக்கிழமை, வெள்ளி விலையில் பெரிய சரிவு பதிவு செய்யப்பட்டது. வெள்ளிக்கிழமை காலை, வெள்ளியின் விலை கிலோவுக்கு 66,627 ஆக இருந்தது. ஆனால் நாள் முடிவில் வெள்ளி பலவீனமடைந்தது. வெள்ளி ஒரு கிலோ ரூ .1,822 குறைந்து ரூ .64,805 ஆனது. முன்னதாக, பிப்ரவரி 1 ஆம் தேதி, பட்ஜெட் தினத்தன்று, MCX-ல் வெள்ளி ஃபூச்சர்ஸ் மார்ச் ஒப்பந்தம் ரூ .7400 க்கு மேல் உயர்ந்தது. வெள்ளியின் மிக உயர்ந்த விலை கிலோவுக்கு ரூ .79,980 ஆகும். இதன்படி, வெள்ளி அதன் அதிகபட்ச விலையிலிருந்து கிலோவுக்கு சுமார் 15,105 ரூபாய் மலிவாகியுள்ளது.


ALSO READ: Gold, Silver வாங்கும்போது KYC அவசியமா? அரசாங்கம் என்ன சொல்கிறது?


வீட்டில் தங்கம் உள்ளதா?


விரைவில் தங்கத்தை (Gold) வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் (Gold Monetization Scheme) அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு வங்கிகளும் சேர்க்கப்படுகின்றன.


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும். இந்த திட்டத்தின் கீழ் நகைக்கடைக்காரர்களுக்கும் தங்க வைப்பு பெறும் உரிமை கிடைக்கக்கூடும். மேலும், இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் நகை விற்பனையாளர்கள் மூலம் தங்க டெபாசிட்டைப் பெற முடியும். புதிய மாற்றங்களின் கீழ், இந்தத் திட்டத்துடன் அதிக வாடிக்கையாளர்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.


தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு 2.25 சதவீதம் வரை வங்கி உங்களுக்கு வட்டி செலுத்தும். நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தைத் தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் 1.3 ஆண்டுகள், 2.4 ஆண்டுகள் மற்றும் 5 நாட்களுக்கு கூட தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.


ALSO READ: அதிசய நதி: ஜார்கண்டின் இந்த நதியில் தங்கம் கிடைக்கிறது


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR