புது தில்லி: இந்தியா பல அற்புதங்களும் அதிசயங்களும் நிறைந்த பூமியாகும். வியத்தகு பல விஷயங்கள் இங்கு தினமும் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட அதிசயங்களில் ஒன்றைப் பற்றிதான் இன்று நாம் பார்க்கவுள்ளோம்.
இந்தியாவில் ஒரு நதியிலிருந்து தங்கம் கிடைக்கிறது என கூறப்படுகிறது. கேட்க ஆச்சரியமாகத்தான் இருக்கும். ஆனால் இது முற்றிலும் உண்மையான விஷயமாகும். ஆம்!! இந்த தங்க நதியின் மணலில் இருந்து பல ஆண்டுகளாக தங்கம் எடுக்கப்படுகிறது. இங்குள்ள மக்கள் ஆற்றில் இருந்து தங்கத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு அதன் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.
ஸ்வர்ண ரேகா ஆற்றில் தங்கம் கிடைக்கிறது
ஸ்வர்ண ரேகா என்ற நதி ஜார்கண்ட்டின் (Jharkhand) ரத்னகர்பாவில் பாய்கிறது. இந்த ஆற்றில் இருந்து தங்கம் எடுக்கப்படுகிறது. இந்த நதி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் (West Bengal) மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளிலும் பாய்கிறது. சில இடங்களில் இந்த நதி சுபர்ணரேகா நதி என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்வர்ணரேகா நதி 474 கி.மீ நீளம் கொண்டது
ஸ்வர்ண ரேகா நதி தென்மேற்கில் உள்ள நாகடி கிராமத்தில் ராணி சுவான் என்ற இடத்திலிருந்து உருவாகி வங்காள விரிகுடாவில் (Bay of Bengal) விழுகிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 474 கி.மீ. ஆகும்.
ALSO READ: நெகிழ வைத்த Ratan Tata, Twitter-ல் பாராட்டும் மக்கள்: அப்படி அவர் செய்தது என்ன?
தங்கத் துகள்களின் ரகசியங்கள்
ஸ்வர்ண ரேகா நதி மற்றும் அதன் கிளை நதியான கர்கரியில் தங்கத் துகள்கள் காணப்படுகின்றன. கர்காரி ஆற்றில் இருந்துதான் தங்கத் துகள்கள் ஸ்வர்ண ரேகா நதிக்கு பாய்ந்து செல்கின்றன என மக்கள் நம்புகிறார்கள். கர்காரி நதி 37 கி.மீ நீளம் கொண்டது. இன்று வரை, இந்த இரண்டு ஆறுகளிலிலும் தங்கத் துகள்கள் எங்கிருந்து வருகின்றன என்பது புதிராகவே உள்ளது.
உள்ளூர் பழங்குடியினர் தங்கத்தை பிரித்தெடுக்கின்றனர்
ஜார்க்கண்டில் நதியின் அருகே வசிக்கும் மக்கள் மணலை வடிகட்டி தங்கத் (Gold) துகள்களை சேகரிக்கின்றனர். இங்குள்ள ஒருவர் ஒரு மாதத்தில் 70 முதல் 80 தங்கத் துகள்கள் சேகரிக்கிறார். இந்த தங்கத் துகள்களின் அளவு அரிசி தானியங்களைப் போன்று சிறிதாக உள்ளது. இங்குள்ள பழங்குடி மக்கள் மழைக்காலத்தைத் தவிர ஆண்டு முழுவதும் இந்த வேலையைச் செய்கிறார்கள்.
ALSO READ: Viral Video: ஒரே மேடையில் இரு பெண்களை மணந்த ஆண் watch this...
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR