Gold Silver Prices: சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து 45600 ஆக உயந்தது. தங்கம் கிராம் ஒன்றுக்கு 65 ரூபாய் உயந்தது 5700 ஆக இன்று விற்பனை ஆகிறது. அலங்கார மதிப்புக்கு மட்டுமல்ல, பாதுகாப்பான முதலீட்டு கருவியாகவும் (Better Investment Option) பார்க்கப்படும் தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் உள்நாட்டு மற்றும் சர்வதேச காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே, தங்கத்தின் விலை தொடர்ந்து மாறுபடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தமிழ்நாட்டில் தங்கம் விலை 10 கிராமுக்கு 24 காரட் ₹ 61470 ஆகவும், 22 காரட் ₹ 56350 ஆகவும் உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் (Gold Silver Prices) தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது. இது தவிர வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹79.50 என்ற அளவில் உள்ளது. அதேபோல ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹79500 என்ற அளவில் உள்ளது.


அண்மையில் அரசாங்கம் தங்கம் மீதான சுங்க வரியை உயர்த்தியது. இது வெள்ளி விலையில் கணிசமான அதிகரிப்புக்கு காரணமானது. பொதுவாக தங்கம் விலை உயரும் போது, முதலீட்டாளர்கள் வெள்ளியில் முதலீடு செய்வார்கள். சர்வதேச சந்தைகளில் வெள்ளி விலைகள் அவுன்ஸ் ஒன்றுக்கு 15 டாலர்களை நெருங்கியதால் வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது.  


மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (எம்சிஎக்ஸ் தங்கம் விலை) இது பற்றிய தகவல் கிடைத்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியின் தாக்கம் உள்நாட்டு சந்தையிலும் காணப்படுகிறது.  


மேலும் படிக்க | வங்கிக் கடனுக்கான ரிஸ்க் வெயிட்டேஜ் அதிகமானது! வட்டி விகிதமும் ராக்கெட் வேகம் எடுக்குமா?


தங்கத்தின் விலை எப்போதெல்லாம் உயரும்?
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை மாறுபடும். அதேபோல, உலக அளவில் ஏற்படும் மாற்றங்களும் தங்கத்தின் விலையில் மாற்றத்திற்கு காரணமாகும். தற்போது இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதலும் போரும் உச்சமடைந்து உள்ளது.


ஹமாஸ்- இஸ்ரேல் சண்டையினால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்ந்துவிட்டது. கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் தங்கத்தின் விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. நேற்று தங்கத்தின் விலை கிராம் ரூ. 5,635 என்ற அளவிலும் சவரன் (எட்டு கிராம் தங்கம் ஒரு பவுன் அல்லது சவரன் என்று கூறப்படுகிறது) ரூ. 45,080 ஆகவும் இருந்தது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிராம் ரூ.65-ம், பவுன் ஒன்றுக்கு 520 ரூபாயும் அதிகரித்துள்ளது. 


தினசரி அடிப்படையில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்படும். அதேபோல, நகரத்திற்கு நகரம் தங்கத்தின் விலையில் சிறிய மாற்றங்கள் இருக்கும். தங்கத்தின் விலையை வீட்டில் அமர்ந்தபடியே தெரிந்துக் கொள்ளலாம். 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்து விலையைச் சரிபார்க்கலாம்.


நீங்கள் மெசேஜ் செய்த மொபைல் எண்ணில்  செய்தி வரும். சந்தையில் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், ஹால்மார்க் முத்திரை இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க அரசு செயலியையும் பயன்படுத்தலாம். 'பிஐஎஸ் கேர் ஆப்' என்ற செயலி மூலம் தங்கம் உண்மையானதா அல்லது எத்தனை சதவிகிதம் உண்மையானது என்பதை சரிபார்க்கலாம். 


மேலும் படிக்க | Indian Railways அதிரடி: இனி ரயிலிலேயே வெளிநாடு செல்லலாம்... வெளிவந்த மாஸ் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ