7th Pay Commission: ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. டிஏவு ஹைக் உடன் இதுவும் கிடைக்கும்
7th Pay Commission Update: பதவி உயர்வு (promotion rules) தொடர்பான விதிகளில் அரசு மாற்றம் செய்து, அறிவிப்பு வெளியிட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7வது சம்பள கமிஷன் புதுப்பிப்பு: மத்திய அரசு ஊழியர்களின் (Central Govt Employees) அகவிலைப்படி உயர்வுக்கு (DA Hike) முன்னதாக ஊழியர்களின் பதவி உயர்வு குறித்து அரசு ஒரு பெரிய செய்தியை வெளியிட்டுள்ளது. ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊழியர்களுக்கு இந்த முக்கிய கட்டாயம் பயனளிக்கும். அதன்படி தற்போது அரசு பதவி உயர்வு (promotion rules) விதிகளில் மாற்றம் செய்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அளித்துள்ளது:
இந்நிலையில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு சிவில் ஊழியர்களுக்கான (defense civilian employees) பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச சேவை விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
அறிவிப்பு வெளியிடப்பட்டது:
எங்கள் கூட்டாளி இணையதளமான ஜீ பிசினஸ் இன் படி, மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பாதுகாப்பு ஊழியர்களுக்கு திருத்தப்பட்ட அளவுகோல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் பதவி உயர்வுக்கான தகுதி குறித்த தகவல் இந்த அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
தர வாரியான பங்கு பட்டியல்:
இதில், ஒவ்வொரு நிலைக்கு ஏற்ப பதவி உயர்வுக்கான அளவுகோல்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் குறிப்பாணையும் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தர வாரியான பட்டியலும் பகிரப்பட்டுள்ளது.
எவ்வளவு அனுபவம் தேவைப்படும்:
பதவி உயர்வுக்கான சேவை பட்டியலின் படி,
லெவல் 1 முதல் 2 மற்றும் 2 முதல் 3 வரை உள்ள பணியாளர்கள் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லெவல் 2 முதல் 4 வரை, 8 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். அதேசமயம், லெவல் 3 முதல் 4 வரை, 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
லெவல் 17 வரையிலான ஊழியர்களுக்கு 1 வருடம்
லெவல் 6 முதல் 11 வரை, 12 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்த லெவல்களுக்கு அடிப்படையில் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும்.
ஊழியர்களின் அகவிலைப்படி விரைவில் அதிகரிக்கும்:
இதற்கிடையில் மத்திய அரசு விரைவில் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை பரிசாக வழங்கலாம். செப்டம்பர் மாதம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் டிஏ ஹைக் அறிவிக்கப்படலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். மேலும் இந்த ஆண்டு, அரசு இரண்டாவது முறையாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் பம்பர் உயர்வு இருக்கும். அதுமட்டுமின்றி உயர்த்தப்படும் அகவிலைப்படி ஜூலை 1, 2023 முதலே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
4% அகவிலைப்படி உயர்வு:
அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதுடன், அகவிலைப்படி, வீட்டு வாடகை கொடுப்பனவு மற்றும் (HRA) பல வகையான கொடுப்பனவுகள் இதில் சேர்க்கப்படுகின்றன. அதன்பிறகுதான் ஊழியர்களின் சம்பளம் கணக்கிடப்படுகிறது. இதற்கு முன், ஜூலை அரையாண்டுக்கான ஊழியர்களின் அகவிலைப்படியில் (DA Hike) நான்கு சதவீத உயர்வைக் காணலாம். இதற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி விரைவில் மத்திய அரசு அகவிலைப்படி 4% ஆக உயர்த்தலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ