அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?

Old Pension Scheme: இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களிலும் இந்த செயல்முறை மெதுவாக நடந்து வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 15, 2023, 06:45 AM IST
  • பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு.
  • பழைய ஓய்வூதியம் பற்றிய மிகப்பெரிய செய்தி.
  • பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமலுக்கு வரும்?
அமைச்சர் அளித்த ஜாக்பாட் அப்டேட்: மீண்டும் வருகிறதா பழைய ஓய்வூதியம்? எப்போது?  title=

பழைய ஓய்வூதிய திட்டம், சமீபத்திய புதுப்பிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து நாடு முழுவதும் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் பல மாநில அரசு ஊழியர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக பல போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. பல மாநில  அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி விட்டன. சமீபத்தில் மத்திய அரசு, ஊழியர்களின் பழைய ஓய்வூதியம் இனி புதிய பார்முலாவுடன் அமல்படுத்தப்படும் என்று கூறியது. இது ஊழியர்களுக்கு சிறிய நிவாரணத்தை அளித்தது. இதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்தியாவின் ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பழைய ஓய்வூதியம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில மாநிலங்களிலும் இந்த செயல்முறை மெதுவாக நடந்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் ஓய்வூதிய முறை படிப்படியாக சீரமைக்கப்படும் என கூறப்படுகின்றது. 

ஏப்ரல் 1, 2004 -க்குப் பிறகு பழைய ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு பணியில் சேர்ந்துள்ள ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய முறை அதாவது NPS செயல்படுத்தப்படும் என கூறப்பட்டது. எனினும், இது குறித்த அதிருப்தி ஊழியர்கள் இடையே உள்ளது. ஏனெனில் பழைய ஓய்வூதிய முறையில் அதிக நன்மைகள் உள்ளன. எனினும், பணியாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதிய முறை போல தேசிய ஓய்வூதிய முறையிலும் நன்மைகளை அதிகரிக்க மத்திய அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. 

நிதித்துறை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அரசாங்கம் அமைத்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. NPS ஐ எவ்வாறு மேம்படுத்துவது, அரசு ஊழியர்கள் அதிலிருந்து சிறந்த வருமானத்தை எவ்வாறு பெறுவது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டங்களை வகுக்குமாறு குழுவிடம் கேட்கப்பட்டுள்ளது. தேசிய ஓய்வூதிய திட்டத்திற்கு (NPS) நேரடி நிதி உதவி வழங்குவதும் அரசாங்கத்தின் யோசனையில் இருக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பழைய ஓய்வூதியம் பற்றிய மிகப்பெரிய செய்தி

சமீபத்தில் நிதி அமைச்சர் அளித்த பேட்டியின்படி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளிவந்தது. இதில், ‘பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவது அவ்வளவு சாத்தியமில்லை. ஏனெனில் புதிய ஓய்வூதியத்தின்படி உங்கள் தொகை டெபாசிட் செய்யப்படுகிறது.’ என  நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.  

மேலும் படிக்க | 10, 20, 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்பான புதிய அப்டேட் தந்த ரிசர்வ் வங்கி

மத்திய அரசும், சில மாநில அரசுகளும் தேசிய ஓய்வூதியத்தை அமல்படுத்தி வருகின்றன. சில மாநில அரசுகள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்துள்ளன. இந்த அரசுகள் முன்னர் மத்திய அரசிடம் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் தொகையை டெபாசிட் செய்தன. ஆனால், இப்போது பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வந்த பின்னர், இந்த மாநில அரசுகள் தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் மத்திய அரசிடம் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மீண்டும் கோரி வருகின்றனர். இதை அடுத்து நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியானது.

‘இந்த பணத்தை மாநில அரசுகளுக்கு வழங்க முடியாது. அப்படி செய்தால், நிதி நிலைமை மோசமாகலாம்.’ என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 

பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமலுக்கு வரும்?

பழைய ஓய்வூதியத்தை (Old Pension Scehme) அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தற்போது எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. ஜனவரி 11, 2023 அன்று, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் 8 வார கால அவகாசம் வழங்கியது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஆனால் இந்த நேரம் முடியப் போகிறது. மத்திய அரசு இதுவரை இது குறித்து எந்த தகவலையும் அனுப்பவில்லை. இதில் முந்தைய ஓய்வூதியத்தை தற்போது அமல்படுத்தும் சாத்தியங்களை பரிசீலிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் சிறப்புச் சலுகை! இனி ரூ.20க்கு முழு உணவு கிடைக்கும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News