Petrol Diesel Latest News: பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் இப்போது இதற்கு நிவாரணம் அளிக்கும் ஒரு செய்தி வந்துள்ளது. பைக்குகள் மற்றும் கார்களில் E20 பெட்ரோல் பயன்பாடு அனுமதிக்கப்பட்டுள்ளது. E20 என்றால், 20 சதவீதம் எத்தனால் (Ethano Blend Petrol) கலக்கப்பட்ட பெட்ரோல் என்று பொருளாகும். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் E20 ஐப் பயன்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

E20 பெட்ரோல் பயன்படுத்த அனுமதி


E20 பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கும் நல்லது என்று அமைச்சகம் கூறியுள்ளது. சாதாரண பெட்ரோலைக் (Petrol) காட்டிலும், இதிலிருந்து கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரோகார்பன்கள் மிகக் குறைவாக வெளியிடப்படுகின்றன. இந்த எரிபொருளைப் பொறுத்தவரை, கார் மற்றும் பைக் உற்பத்தியாளர்கள் தனித்தனியாக E20 க்கு எந்த வாகனம் பொருத்தமானது என்பதை தெரிவிக்க வேண்டும். E20 பெட்ரோல் வாகனம் என்பதைக் குறிக்க வாகனத்தில் ஒரு ஸ்டிக்கரும் ஒட்டப்பட வேண்டும்.


E20 பெட்ரோலில் பல நன்மைகள்


ALSO READ: Petrol-Diesel price on 2021 8 March: மார்ச் 8ஆம் தேதியன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை


2014 ஆம் ஆண்டில், 1 சதவீதத்திற்கும் குறைவான எத்தனால் பெட்ரோலில் கலக்கப்பட்டது, அதாவது சேர்க்கப்பட்டது. பின்னர் அது 8.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இப்போது பெட்ரோலில் 10 சதவீத எத்தனால் சேர்ப்பது இலக்காக உள்ளது. பெட்ரோலில் எத்தனால் சேர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன.


1. முதல் நன்மை என்னவென்றால், பெட்ரோலியத்தை இந்தியா நம்பியிருப்பது பெருமளவில் குறைக்கப்படும். தற்போது, ​​இந்தியா தனது எண்ணெய் தேவையில் 83% இறக்குமதி செய்கிறது.


2. கார்பன் டை ஆக்சைடு (CO2) குறைக்கப்பட்டால், வளிமண்டலத்திற்கு ஏற்படும் சேதமும் குறையும்.


3. எத்தனால் அதிகரித்த பயன்பாடு விவசாயிகளுக்கு (Farmers) பயனளிக்கும், அவர்களின் வருமானம் அதிகரிக்கும். ஏனென்றால் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் பல பயிர்களிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது.


4. சர்க்கரை ஆலைகள் ஒரு புதிய வருமான ஆதாரத்தைப் பெறும். அதில் இருந்து அவர்கள் விவசாய நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த முடியும்.


5. எத்தனால் மிகவும் சிக்கனமானது. எனவே அதிகரித்து வரும் பெட்ரோல் விலையிலிருந்து நுகர்வோருக்கும் சிறிது நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2025 க்குள் 20% எத்தனால் கலக்கும் இலக்கு


2030 ஆம் ஆண்டளவில் பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலக்கும் இலக்கை அரசாங்கம் (Government) நிர்ணயித்திருந்தது. ஆனால் இப்போது அந்த இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2025 ஆம் ஆண்டிலேயே அடைய அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 2022 க்குள் பெட்ரோலில் 10 சதவீதம் எத்தனால் கலப்பதை அரசாங்கம் இலக்காகக் கொண்டிருந்தது. அக்டோபரில் தொடங்கும் தற்போதைய எத்தனால் விநியோக ஆண்டில், பெட்ரோலில் 8.5% எத்தனால் கலப்பு உள்ளது. இது 2022 க்குள் 10% ஆக அதிகரிக்கும்.


அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025 க்குள் 20 சதவீதம் எத்தனால் கலக்க, 1200 கோடி ஆல்கஹால் / எத்தனால் தேவைப்படும். 700 மில்லியன் லிட்டர் எத்தனால் தயாரிக்க, சர்க்கரைத் தொழில் 6 மில்லியன் டன் உபரி சர்க்கரையைப் பயன்படுத்த வேண்டும். மற்ற பயிர்களில் இருந்து 500 மில்லியன் லிட்டர் எத்தனால் தயாரிக்கப்படும்.


ALSO READ: Petrol-Diesel இன்று எவ்வளவு கொதித்தது? ஒரு லிட்டரின் விலை என்ன?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR