வங்கிகள் தனியார்மயம்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய விளக்கம்!
எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார் மயமாக்கப்படாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
Bank privatisation News: அனைவரின் நலன்களும் கவனிக்கப்படும் என்றும் அனைத்து வங்கிகளும் தனியார்மயமாக்கப்படாது என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி ஊழியர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுடன் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Finance Minister Nirmala Sitharaman), நாடு முழுவதும் அனைத்து வங்கிகளும் தனியார் மயமாக்கப்படாது என்று கூறினார். அதில் தனியார்மயமாக்குவது என்ற முடிவு திட்டமிட்ட ஒன்று தான் என்றும், எல்லா பொதுத்துறை வங்கிகளுமே தனியார்மயமாக்கப்படாது என தெரிவித்தார்.
தனியார் வசம் தரப்படும் வங்கிகளைப் பொறுத்தவரையில், அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரின் நலனும் காக்கப்படும் என்றும் எந்தச் சூழலிலும் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார்.
முன்னதாக கடந்த மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு பட்ஜெட்டின் (Budget 2021) போது அறிவித்ததை எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் (Bank Strike) ஈடுபட்டனர். அனைத்து மக்களின் சேமிப்பு பணம் வங்கிகளில் இருப்பதாகவும், அவற்றை தனியாருக்கு விற்பது நியாயமற்றது எனவும் வங்கி ஊழியர் சங்கத்தினர் (United Forum of Bank Unions-UFBU) தெரிவித்தனர்.
ALSO READ | SBI உட்பட அனைத்து அரசு வங்கிகளிலும் இந்த சேவைகள் பாதிக்கப்படும்!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR